பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 நீங்காத நினைவுகள் என்ற நம்மாழ்வார் கொள்கையில் பிடிப்புள்ளவனாகையாலே எனக்கு இந்த அழைப்பு தேனே பாலே கன்னலே அமுதே' எனத் தித்தித்தது. ஆதலால் வயது முதிர்ந்த காலத்தில் உணவு முதலிய துன்பங்களையும் பொருட்படுத்தாது அழைப்பை ஏற்றுக் கொண்டேன். மூன்று மாத காலத்தில் "அங்குற்றேன் அல்லேன்: இங்குற்றேன் அல்லேன் உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து எங்குற்றேனும் அல்லேன்" என்ற ஆழ்வார் திருவாக்கின்படி விட்டுவிட்டு திருப்பதி 45 நாட்களும் சென்னையில் 45 நாட்களும் கழித்தேன். எம்.ஏ. மாணாக்கர்கட்கு வைணவ தத்துவத்தை, என்றுமில்லாத முறையில் மிக உற்சாகமாக, நானே வியக்கும் வண்ணம் கற்பித்தமை நீங்காத நினைவாக மனத்தில் எழுகின்றது. நினைவு 8 : அந்த ஆண்டு 1986 சனவரி 14 என்பதாக நினைவு பொங்கல் பண்டிகை சமயம், திருப்பதியில் தங்கிவிட்டேன். ஆந்திரத்தில் தீபாவளியைவிட பொங்கல் பண்டிகைக்குச் சிறப்பு அதிகம். அதனைப் "பெத்த பண்டுக" (பெரிய திருநாள் என்று வழங்குவர். தமிழர்கள் பொங்கல் திருநாளைத் "தமிழ்த் திருநாள்" என்று பெருமையாகப் பேசுவதுண்டு. இப்படிச் சொல்லுவதைவிட "உழவர் திருநாள்" என்று செப்புவதே சிறப்பு என்ப்து என் கருத்து. எல்லோரும் பொங்கல் திருநாளைக் கொண்டாடினாலும் அத்திருநாளன்று உழவர்களிடம் காணப்பெறும் உற்சாகத்தைப்போல் பிறரிடம் காண்டல் அரிது. - “டாக்டர் ரெட்டி விருந்தினர் மாளிகையில் இருந்த என்னை இரண்டுநாள் தம் வீட்டு விருந்தினனாக அழைத்துத் தம் திருமாளிகையிலேயே தங்க வைத்து மிக்க அன்புடன் உபசரித்தார். தாம் அன்புடன் பராமரிக்கும் தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்தார். தர்பூஸ் கொடி செழிப்புடன் படர்ந்து ஏராளமான கனிகள் நிறைந்திருப்பதையும், குட்டை, நெட்டை என்று பல்வேறு வகைத் 12 மேலது - 57 : 2