பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் .ேN. ரெட்டி 247 தென்னை மரங்கள் குலை தள்ளியிருப்பதையும் காட்டி என்னை மகிழ்வித்தார். மாட்டுச் சாணத்தை எரித்து அந்த வாயுவினால் அமைந்த அடுப்பைக் காட்டி என்னை வியக்க வைத்தார். தர்பூஸ் பழத்தை மைசூர்பாகுத் துண்டுகள் போல் அழகாக வெட்டித் தட்டில் வைத்துத் தந்தது கவிதையை அநுபவித்ததுபோல இருந்தது. கால தாமதமாகத் திருமணம் ஆனாலும் "மனைத்தக்க மாண்புடையவள்" இல்லத்தரசியாக அமைந்ததைக் கண்டு பெருமிதம் கொண்டேன். கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்கவாறு வாழ்க்கை நடத்துவதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். சந்திரகிரிப் பக்கம் உள்ள மங்காபுரத்துக்குத் தம் குடும்பத்துடன் என்னையும் இட்டுச் சென்று அன்னையின் அருளுக்குப் பாத்திரமாகச் செய்ததைக் கிடைத்ததற்கரிய பேறாகக் கருதுகின்றேன். நான் திருப்பதியில் இருந்த 17 ஆண்டுகளில் இந்தத் திருக்கோயிலுக்குச் செல்லாத குறையினைப் போக்கியது யான் பெற்ற மற்றொரு பேறாக அமைந்தது. - காலந் தாழ்ந்து மணம் செய்து கொண்டாலும் நல்ல மனைவி வாய்த்து இல்லறமாகிய நல்லறம் புரிந்து வருவதை நேரில் காண முடிந்தது. சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாம லேவந்த விருந்தோம்பி - செல்வத்து) இடரின்றி ஏமாந் திருந்தாரே நாளும் கடலுள் துலாம்பண்ணி னார்" (எமாந்திருக்காரே = ஏம (ம ஆர்ந்திருந்திரே இன்பமுற்று வாழ்ந்தவர்களே! என்ற பழமொழி ஆசிரியர் காட்டும் குடும்பத்தைக் காணமுடிந்தது. "ஆசைக்கு ஒரு மகள், ஆஸ்திக்கு ஒரு மகன்" என்று இரண்டு 13 பழமொழி நானூறு-130) ऍ