பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 நீங்காத நினைவுகள் மக்கட்ச் செல்வங்களைப் பெற்றிருத்தலையும் கண்டேன்; மகிழ்ந்தேன். இரு செல்வங்களும் இப்போது பொறியியல் கல்வி பெற்று வருவதாக அறிகின்றேன். r - நினைவு - 9 : இவர் துணை வேந்தராக இருந்த காலத்தில் (மார்ச்சு 27, 1986) தான் தமிழ்த்துறையின் வெள்ளி விழா சீருடனும் சிறப்புடனும் நடைபெற்றது. கேரள ஆளுநர் பேராசிரியர்' இராமச்சந்திரன் வெளிவிழாவைத் தொடங்கி வைத்துச் சிறப்பித்து வாழ்த்து கூறினார். இந்த விழாவின்போது வைணவ உரைவளம் 2 தம்பிரான் தோழர் 3 ஆன்மிகமும் அறிவியலும் (A Collected Papers என்ற நான்கு நூல்கள் திரு. R. சுந்தரராஜூ I.P.S. அவர்கள் தலைமையில் வெளியிடப் பெற்றன. திரு. அ. நடராசன், இயற்பியல், திரு ஜயந்தா ஆங்கிலம் இந்த நூல்களைப் பாராட்டிப் பேசியதாக நினைவு. திரு. R. சுந்தரராஜு தம் தந்தையா - அன்னையார் பெயரில் (திரு. P. அரங்கசாமி ரெட்டியார் - திருமதி. சத்தியபாமா அம்மாள் அறக்கட்டளை) ரூ. 25000/= அளவில் தமிழ்த்துறையில் ஓர் அறக்கட்டளை நிறுவுவதாக அறிவித்து ரூ. 5000/-க்கு ஒரு வரைவோலை (Draft) வழங்கினார். பேராசிரியர் ந. சுப்புரெட்டியார் துறை நிறுவிய பேராசிரியர் டாக்டர் பொன். செளரிராசன் தமிழ்த்துறைத் தலைவர் இருவரும் பாராட்டுரையும் கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்றனர். i நினைவு - 10 : ஆந்திரத்தில் ரெட்டி - நாயுடு சாதிப் போராட்டம் நடைபெற்று வருவது உலகறிந்த செய்தி. அரசியலில் நடைபெறும் இந்தப் போராட்டம் கற்றவர்கள் நிறைந்த பல்கலைக்கழகத்திலும் தலைகாட்டி வருவது மிகவும் வருந்தத்தக்க விஷயம். நான் அங்குப் பணியாற்றியபோது டாக்டர் .ேN. ரெட்டியிடம் இந்தக் குறையைக் காணவில்லை. இதுபற்றி நிலவிய "கிக்கிசுப்பையும்" கேட்கவில்லை. அப்படிப்பட்ட குணமுடையவர் டாக்டர் ரெட்டி என்பதற்கு ஒரு சிறு அறிகுறியும் காணவில்லை. காற்று வாக்கில் கூட அப்படிப்பட்ட செய்தி என் காதிற்கு எட்டவில்லை.