பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் .ேN. ரெட்டி 249 நினைவு 11 : டாக்டர் G.N. ரெட்டி துணை வேந்தராகப் பதவி வகித்த காலத்தில் எல்லா மட்டங்களிலும் உள்ள ஊழியர்கட்குப் பதவி உயர்வு, புதிதாக ஆட்கள் நியமனம் போன்றவற்றில் பேருதவிகள் செய்தார் என்ற செய்தியைக் கேள்வியுற்று நான் மிகவும் மகிழ்ந்தேன். இவர்களுள் எல்லாச் சாதியார்களும் அடங்குவர் என்ற செய்தியும் பரவலாகப் பேசப் பெற்றது. இவ்வாறு பயன்பெற்றவர்களில் ரெட்டி குலத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்திருக்கக் கூடும். இதனை வைத்துக் கொண்டு சிலர் கயிறு திரிக்கின்றனர் போலும் என்று நினைத்துக் கொண்டேன். இம்மாதிரி சந்தர்ப்பங்களில் ஒருவரைப்பற்றி மதிப்பீடு செய்யும்போது, குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்கக் கொளல்" என்றவள்ளுவத்தை உரைகல்லாக கொண்டு ஆராய்ந்தால் உண்மை தெளிவாகும். நிர்வாகத்தில் இத்தகைய குறைகள் ஏற்படுவது இயல்பு. நீதிமன்றங்களில் வழங்கப்பெறும் நீதியும் சில சமயம் ஒரு பக்கம் சாய்ந்திருப்பதைக் காண்கின்றோம். இவையெல்லாம் உலகியலில் ஒட்டிய நடைமுறை எனக் கொண்டு மறப்பது - மன்னிப்பது - பெருந்தன்மையாகும். நான் திருப்பதியில் பணியாற்றியபோது தெலுங்குத்துறையில் ஆய்வு மாணவர்களாக இருந்த இருவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தெலுங்குத்துறையில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இருவருமே எம்.ஏ. முதல்வகுப்பு:பெற்று டாக்டர் பட்டமும் திருப்பதியில் பெற்றவர்கள். இவர்களை நான் தமிழ்த்துறைக்குப் போகும்போதெல்லாம் சந்தித்து உரையாடுவதுண்டு. தெலுங்குத் துறை வளர்ச்சியைப்பற்றி உசாவுவதும் உண்டு. எப்போதோ "நீங்கள் திருப்பதியில் பணியாற்றினால் சிறக்குமல்லவா? என்று கேட்டதாக நினைவு. இந்த 14 குறள் - 504 5