பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நீங்காத நினைவுகள் இருவரையும் திருப்பதியிலிருந்தபோதே நன்கு அறிவேன் மிக அன்பாகப் பழகுவேன். பல துறையிலுள்ள மாணவர்கள்பால் எனக்கு நல்ல செல்வாக்கு உண்டு. அவர்கட்கு அவர்கள் துறையில் சேருங்கால், அல்லது தேவைப்படுங்கால் மதிப்பெண் பட்டியல், பிறந்த நாள் சான்றிதழ், சாதியற்றிய சான்றிதழ் இவற்றின் நகல்களில் கையெழுத்திடுமாறு வேண்டி வருவர். நானும் என் துறையிலுள்ள ஆய்வு மாணவர்களின் துணைகொண்டு அசலையும் நகலையும் சரிபார்க்கச் செய்து கையெழுத்திட்டு வாழ்த்துவேன். இக்காரணம் பற்றியும் என் செல்வாக்கு பெருகியது. - சென்னையில் பணியாற்றும் இருவரில் ஒருவர் நாயுடு வகுப்பினர் மற்றொருவர் ரெட்டி குலத்தவர். "நான் கம்மா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவனாதலால் டாக்டர் ரெட்டி என்னைத் தேர்ந்தெடுக்காமல் ஒதுக்கினார்" என்று குறைகூறினார், மற்றவர் "நான் ரெட்டி வகுப்பினனாதலால் யாராவது சாதியானுக்குப் பதவி வழங்கினார் என்று குறை கூறுவார் என்று அஞ்சி என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை" என்று குறைபட்டுக் கொண்டார், தெலுங்குத் துறையில் கம்மா, ரெட்டி குலத்தவர்கள் பணியாற்றி வருவதை நான் நன்கு அறிவேன். ஆதலால் "டாக்டர் ரெட்டி சாதி வேற்றுமை பாராட்டுவர்" என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதைத் தெளிந்து கொண்டேன். நினைவு 12 : துணைவேந்தர் பணியிலிருந்து 45.1987இல் ஒய்வு பெற்றார். மீண்டும் துறைக்கு வந்து ஓராண்டுக் காலம் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இப்பதவியிலிருந்தும் ஜூலை 1988இல் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். பின்னர் ஆகஸ்டு, 1988 இல் தகுநிலைப் பேராசிரியராகச் சேர்ந்தார். இத்திட்டப்படி ஒய்வு ஊதியம் போக பல்கலைக் கழக மானிய ஆணையம் மாதம் ஒன்றுக்கு ரூ. 4000 ஊதியமாக வழங்கும். - இக்காலத்தில் அவர் மன அமைதியுடன் இல்லை. அல்வமயம் துறைத்தலைவராக இருந்த துணைப் பேராசிரியர் இவருக்குத் தங்க இடவசதியையும்கூட அமைத்துத்தர