பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி . 253 கொண்டிருப்பார். குள்ளமான உருவம். புதிதாக சந்தில் நுழைபவரைப் பார்க்கும்போது பேந்தப் பேந்த விழிப்பார். அடிக்கடி போகும் நான் அவருக்குப் பழக்கமானவனாகி விட்டபடியால் போகும் போதும் திரும்பும்போதும் அவர் கன்னத்தை மெல்லக் கிள்ளிவிட்டு வருவேன். அவ்வளவு நெருக்கம் பல்லாண்டுகள் இடைவெளிக்குப் பிறகு அந்த நெருக்கம் 1970 முதல் தொடங்கி அவர் மறையும் வரை இருந்து வந்தது இறைவனது திருக்குறிப்பேயாகும். இருவரும் வெவ்வேறு இடங்களில் தமிழ்ப் பணியாற்றி வந்ததும் அவன் இட்ட வழக்காகும். இடைப்பட்ட பல்லாண்டுகள் காலவெள்ளத்தில் பல்வேறு விதமாகத் தாக்குண்டு, உந்தப் பெற்று. н "மின்னொடு வானந் தண்துளி தலைஇ ஆனாது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படூஉம் புணைபோல். . . . . . முறை வழிப்பட்டு" தமிழ்த்துறைக்கு ஒதுக்கப் பட்டோம் என்று நினைக்கத் தோன்றுகின்றது. அவர் தமிழைத் தேர்ந்தெடுத்துப் பயின்றவர். "குல வித்தை கல்லாமல் பாகம் படும்" அல்லவா? அவர் பிறப்பு நகர்புறத்தில் நடைபெற்றது என் பிறப்பு நாட்டுப்புறத்தில் ஒரு சிற்றுரில் நடைபெற்றது. தொடக்கத்தில் அறிவியலில் நாட்டம் கொண்டு பட்டப்படிப்பு முடியும் வரை அறிவியலில் ஆழங்கால் பட்டிருந்த என்னைத் தமிழ்த்தாய் ஆட்கொண்டு அரவணைத்தது என் நல்லூழ் எனக் கருதுகின்றேன். இவ்விடத்தில் என் அருமை மாணவர் டாக்டர் அர சிங்காரவடிவேலனரின்' - ஆழ்வாரின் பாசுரத்தில் மூழ்கி மூழ்கி ஆழங்கால் படுவதவர் பிறவிப் பேறு: புறம் 192 3 பழமொழி - 6 தேவகோட்டை சேவுகன் செட்டியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். என் மாணவர்.