பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி நன்னிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும் மேன்மேல் உயர்த்து நிறுப்பானும் தன்னைத் தலையாகச் செய்வானும் தான் என்னுடைய பேராசிரியர் மு. நடேச முதலியாரின் அருமந்தத் திருமகனார் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவியைப்பற்றி எழுதத் தொடங்கும்போது மேற்கண்ட நாலடியாரின் செய்யுள் நினைவிற்கு வருகின்றது. காரணம் எங்கள் இருவருக்குமே இந்தச் செய்யுள் என்றுமே குறிக்கோள் பொருளாக இருந்து வந்ததனால், என்னைவிட பத்து ஆண்டுகட்குமேல் இளையவர். இதனை எழுதும்போது 1998 என் வயது 83 சஞ்சீவி இப்போது இருந்தால் அவர் 75 அகவ்ை உடையவராக இருப்பார். ஆனால் 61-ஆம் அகவையில் சிவப்பேறு அடைந்துவிட்டார். - - நினைவு 1 : நான் திருச்சியில் பயின்றபோது tig34–39) இடைநிலை வகுப்பில் இருந்தபோது 1934-35 காசியப்பா ராவுத்தர் ஸ்டோர்ஸ் என்ற தங்கும் விடுதியில் திருச்சி சவுக் பகுதி) தங்கியிருந்தபடியால் மலைக்கோட்டை யானைக்கட்டித் தெருவில் வாழ்ந்து வந்த பேராசிரியர் மு. நடேச முதலியார் அவர்களை அடிக்கக் காணும் பேறு இருந்தது. பேராசிரியர் முதலியாரின் இல்லம் ஒரு சிறு சந்தில் இருந்தது. அப்போது சஞ்சீவிக்கு 6, 7 வயது இருக்கலாம். எப்பொழுது போனாலும் அவர் சந்தின் முகப்பில் தெருவில் நடைபெறும் காட்சிகளை வேடிக்கை பார்த்துக் 1 நாலடி - 248 அறிவுடைமை-8