பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-ಕಿ-+ ந. சஞ்சீவி 255 அவரிடம் நடத்தைபற்றிய சான்றிதழும் பெற்றேன். சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றபோது 1940-41 திரு பிள்ளையவர்கள் இந்து அறநிலையத்துறை ஆணையராகப் பணியாற்றிவந்தார்கள். அப்போது அவர்கள் சென்னை தியாகராயர் நகரில் குடியிருந்தார்கள். அக்காலத்திலும் அவரை மூன்று முறை சந்தித்தாக நினைவு:இப்படி உறவு அறாத நிலையில் பழகி வந்தேன். நடத்தைச் சான்றிதழையும் புதுப்பித்துக் கொண்டேன். துறையூர் உயர்நிலைப் ப்ள்ளியில் தலைமையாசிரிய்னாகப் பணியாற்றியபோது 1941-50) திரு. பிள்ளையவர்கள் சென்னையில்தான் குடியிருந்தார்கள். கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில், அப்போதும் பலமுறை சந்தித்தேன். ஒருமுறை என் ஆசிரியப் பெருந்தகை திரு. K. இராமச்சந்திர அய்யர் மூலம் சந்தித்தேன். அப்போது திரு. பிள்ளையவர்கள் அரசு தேர்வாணையத்தில் உறுப்பினராகவும் பின்னர் அதன் தலைவராகவும் பணியாற்றிய காலம் என்பதாக நினைவு. இந்தக் காலத்தில் நானும் துறையூரை விட்டு காரைக்குடி அழகப்பர் ஆசிரியப் பயிற்சிக்கல்லூரியில் பேராசிரியனாகப் பணியாற்றி வந்தேன். இக்காலத்தில் என் நிலை 1 18 ஆண்டு அநுபவம்: 2 வித்துவான். தமிழ் எம்.ஏ. பட்டங்கள் பெற்றிருந்தேன் 3 கவிஞன் உள்ளம் அறிவியல் பயிற்றும் முறை" "தமிழ் பயிற்றும் முறை" "கலிங்கத்துப் பரணி ஆராய்ச்சி", "அணுவின் ஆக்கம்", "காலமும் கவிஞர்களும்', "மானிட உடல் தமிழாக்க நூல் என்ற ஏழுநூல்களின் ஆசிரியன். இவற்றையெல்லாம் திரு. பிள்ளையவர்கள் நன்கு அறிந்தவர்கள். தவிர, 1953-56 ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகக் கல்வி ஆலோசனைக் குழுவிலும் (Academic Council) பேரவையிலும், (senate) உறுப்பினராக இருந்து அநுபவம் பெற்றவன் என்பதும் திரு பிள்ளையவர்கள் அறிவார்கள். தவிர, திரு பிள்ளையவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டுகள் துணை வேந்தராக இருந்த காலம், 1958 ஏப்பிரல் திங்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதுமுக வகுப்பிற்குத் தமிழில் அறிவியல் பாடங்களைக் கற்பிப்பது