பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 நீங்காத நினைவுகள் பற்றிய ஆறுவாரக் கருத்தரங்கினை முன்னின்று நடத்தும்படி ஓர் அழைப்பு வந்தது. என்னுடைய அறிவியல் நூல்களைக் கண்ட துணைவேந்தர் எனக்கு இந்தப் பொறுப்பினை நல்கினார்கள். இதற்கு ஊதியமாகவோ சன்மானமாகவோ ஒன்றும் இல்லை. ஆறு வாரம் பல்கலைகழக விருந்தினன் என்ற கெளரவம் ஒன்றுதான் துறைவகை வல்லுநர் (Resource person) என்ற பெருமையும் சேர்ந்தது நாடோறும் கலைச்சொல்லாக்கம், 2 பாடங்களில் மாதிரி வகுப்புகள் எடுத்தல் என்ற இரண்டு திசைகளில் கருத்தரங்கு நடைபெற்றது. எனக்குப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் உண்டி உறையுள் இவற்றிற்கு ஏற்பாடாகி இருந்தது. திரு பிள்ளையவர்கள் நாடோறும் காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு சுமார் 8.30க்குத் தம் இல்லத்திற்கு வந்து தம்மிடம் அளவளாவிக் கொண்டிருக்குமாறு பணித்தார். அங்ங்னமே ஆறுவாரம் போய்க் கொண்டிருந்தேன். 830 முதல் 9.45 வரை இலக்கியச் சல்லாபம் பல்வேறு திசைகளில் பேச்சுகள் நடைபெறும். 955க்குக் காரில் ஏறுவார் என்னையும் ஏற்றிக் கொள்வார். தாம் அலுவலகத்தில் இறங்கிக்கொண்டு என்னைக் கருத்தரங்கம் நடைபெறும் களத்தில் இறக்கிவிடச் செய்வார். இக்காலத்தில் என் திறமை. பணி முதலியவற்றைத் திரு பிள்ளையவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பிருந்தது. அதன் பிறகு சில திங்களில் ஒய்வு பெற்றுத் திருச்சிக்குத் திரும்பிவிட்டார். அகராதிப் பணி தொடங்கப் பெற்றதும் திரு. சஞ்சீவி காஞ்சி பச்சையப்பன் கல்லூரியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டு அகராதித் துறையில் மொழிவல்லுநராக (Language expęrt) Alföğ சேர்ந்திருந்தார் (1959 என்பதாக நினைவு. அநுமன் மகேந்திர மலையிலிருந்து இலங்கைக்கு எளிதில் தாவிச் சென்றதுபோல் அகராதித் துறையிலிருந்து தமிழ்த்துறைக்குத் தாவுவது எளிதன்றோ? சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பலதுறை ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தாவிய வரலாறுகளும் உண்டு தவிர, முன்னணியும் பின்னணியும், பரிந்துரைக்கப் பெரியோர்களும் இருக்கும்போது எச்செயலும் வெற்றியாக முடியுமன்றோ? துணை வேந்தர் ஆதரவும், திரு பிள்ளையவர்களின் ஆசியும் திரு.