பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ந. சஞ்சீவி 257 சஞ்சீவிக்கு இருந்து வந்தன. தம் தந்தையார் காலத்திலிருந்தே இந்த சூழ்நிலை அவருக்கு நிறைய அமைந்திருந்தது. விண்ணப்பம் போட்டபிறகும் அவர் துணைவேந்தரைப் பார்த்து வேண்டுகோள் விடுத்திருக்க முடியும். அவரும் ஏதாவது சாதகமாகப் பேசியிருக்கக் கூடும். நினைவு 3 . அகராதித் துறையில் சுமார் ஓராண்டுகாலமாகப் பணியாற்றி வந்த திரு. சஞ்சீவியும் விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். யார் யாரோ விண்ணப்த்திருந்தனர். அவர்களையெல்லாம் நினைவு கூரமுடியவில்லை. இந்தநிலையில் சஞ்சீவி என்னைப் பற்றியும், நான் விண்ணப்பித்திருந்தது பற்றியும் அறிந்திருப்பார் என்னை நோக்க, அவருக்குக் கிடைக்குமோ என்ற ஐயமும் எழுந்திருக்கக்கூடும். தவிர, இந்த விரிவுரையாளர் பதவி கல்லூரித் தமிழ் ஆசிரியர்கட்குப் பயிற்சி தருவதற்காக ஏற்பட்டது என்ற குறிப்பும் விளம்பரத்தில் குறிப்பிடப்பெற்றிருந்ததாலும் எனக்கு மட்டுமே பயிற்சிக்கல்லூரி அநுபவம் இருந்தமையாலும் எனக்குதான் அப்பதவி கிட்டும், தமக்குக் கிட்டாது என்று சிறு "திகிலும்" சஞ்சீவிக்கு ஏற்பட்டிருத்தல் கூடும். - - இந்த ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பெற்ற தேர்வுக்குழுவில் (selection Committee) திரு. தி.மு. நாராயணசாமிப் பிள்ளையும் இடம் பெற்றிருந்தார். அப்போது அவர் தமிழ்ப்பாடத் திட்டக்குழுவின் தலைவராக இருந்தமையாலும், நானும் இவர் . இக்குழுவில் இடம் பெற்றிருந்தபடியால் உதவலாம் என்றும் சிறிது நம்பிக்கையும் கொண்டிருந்தேன். இந்தக் காலத்தில் சஞ்சீவி எனக்கு நேர் அறிமுகம் இல்லை. பேசினது கூட இல்லை. எனக்கு அவர் என் பேராசிரியர் மு. நடேசமுதலியாரின் முதல் மகன் என்பது மட்டிலும் தெரியும். அவருக்கு அது தெரியாது. அக்காலத்தில் நான் கணிசமான புகழுடன் திகழ்ந்தமையால் காரைக்குடியில் பணியாற்றியவன் என்பது மட்டிலும் அவர் என்னைப்பற்றி அறிந்திருத்தல் கூடும்.