பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 நீங்காத நினைவுகள் துணைவேந்தர் ட்ாக்டர் A.I. முதலியார் என்னைப் பற்றி மிக நன்றாக அறிவார். (1) காரைக்குடிக் கல்லூரி பல்கலைக்கழக ஆணையம் கல்லூரிகளின் நிலைமைகளைச் சோதிக்க வந்தபோது, டாக்டர் முதலியாரைச் சந்தித்து. 1958 "தமிழ் பயிற்றும் முறை", "ஆழிவியல் பயிற்றும் முறை" என்ற அண்மையில் வெளிவந்த என்னுடைய இரண்டு நூல்களைத் தந்தேன். ஐந்து மணித்துளிகள் அன்பாகப் பேசினார். பேச்சுக்கிடையில் verse, Poem என்ற இரு சொற்களின் பொருளை எப்படித் தமிழில் அமைக்கலாம் என்று வினவினார். நான் Verse - செய்யுள் செய்யப் பெற்றது என்ற பொருளில்), Poem - கவிதை என்று சொன்னதை மிகவும் பாராட்டினார். 2 1955-56 ஆண்டுகள் கல்வி ஆலோசனைக் குழு கூட்டங்கள். பேரவைக் கூட்டங்கள் இவற்றிற்கு வரும்போதெல்லாம் 12 முறை மரியாதைக்காக அவர் இல்லத்தில் சந்தித்துப் பேசியதுண்டு. 3 அண்மையில் அகராதித் துறைத் தலைமைப் பதிப்பாசிரியர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கும் தேர்வுக்குழு பேட்டியின்போது அக்குழு உறுப்பினர் தனிநாயக அடிகள் கலைச்சொல் பற்றி விடுத்த வினாக்களுக்கு மறுமொழி தந்த முறை டாக்டர் முதலியாரின் கவனத்தை மிக நன்றாக ஈர்த்திருக்க வேண்டும். Pennis இலிங்கம், clitoris - யோனிலிங்கம், Menopause - சூதக் ஒய்வு என்று கூறி விளக்கிய முறையும், Electron - எதிர் மின்னி Protor - நேரியல் மின்னி, Neutron - பொதுஇயல் மின்னி, Positron நேர் மின்னி, Mason - எதிரியல் மின்னி என்று கூறி விளக்கிய முறையும் அவர் மனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். எத்தனை முறை ஒருவர் பார்த்தாலும் அவரை புதிதாகக் காண்டவர்போல் நடிப்பது டாக்டர் முதலியாருக்கு உரிய தனிப்பாணியாகும். w பேட்டிக்கு முன்பாக சஞ்சீவி அங்குமிங்குமாக நடைபோட்டதும், மிகச் சிறப்பான முறையில் ஆடையலங்காரம் செய்து கொண்டு வந்த முறையும், நடைபோட்டுக் கொண்டிருந்தபோது இருவர் கூடவே நடந்து கொண்டு "உங்கட்குப் பதவி நிச்சயம்" என்று முகஸ்துதி பாடிக்கொண்டிருந்த தோரணையும் இன்றும் பசுமையாக என் நினைவில் உள்ளது. குழு கூடி பேட்டி