பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12

13 வேண்டாம். தினம் ஒரு சாத்துக்குடி, கிச்சிலிப் பழமும் அமிர்தமும் சாப்பிட்டுக்கொண்டு வாருங்கள்போதும் என்றார் அமிர்தம் என்றால் என்ன என்று நான் கொஞ்சம் ஆச்சர்யத்துடன் கேட்க அதுதான் நன்றாய் கடையப்பட்ட பசு மோர் என்று பதிலுரைத்தார்! இச்சந்தர்ப் பத்தில் தேவர்களும் அசுரர்களும் சிரஞ்சீவிகளாய் இருக்க பாற்கடலை மந்திரம் என்னும் மலையாகிய மத்தினால் கடைந்து அதன் பலனாகப் பெற்ற அமிர்தத்தை உண்டு சிரஞ்சீவிகளாய் இருந் தார்கள் என்னும் புராணக் கதை மிகவும் கவனிக்கத்தக்கது. நமது முன்னோர்கள் பல ரகசியங்களின் உண்மைகளை கதைகளின் மூலமாக வெளியிட்டிருக்கின்றனர் என்று எனது நிச்சயமான அபிப்ராயம்.


என் தகப்பனாரிடமிருந்து நான் கற்ற மற்ரறொரு நல்ல வழக் கத்தை கூறுகிறேன். அவர் சாப்பிடும்போதெல்லாம். இலையின் ஒரு மூலையில் வெள்ளை உப்பு கொஞ்சம் வைக்க கட்டளையிடுவார். எல்லா உணவையும் உட்கொண்ட பிறகு கடைசியில் உண்ணும் இரண்டு மூன்று கவளங்களில் கொஞ்சம் உப்பை சேர்த்து புசிப்பார். தயிர் அல்ல்து மோர் சாப்பிடும்பொழுது அது எவ்வளவு தித்திப்பு தயிர் மோராயிருந்தபோதிலும் கொஞ்சம் உப்பை சேர்த்தே சாப்பிடுவார். இதற்கு காரணத்தை நான் வினவியபோது " இந்த உப்பு ஜீரண சக் தியை அதிகரிப்பதுமன்றி நமது பற்களை சுத்தமாய் வைத்திருக்கும் " என்று பதில் உரைத்தார். இந்த வழக்கத்தை நானும் அனுசரித்து வருகிறேன்.


காப்பித் தண்ணீர், தேத் தண்ணீர் -முதலியவைகளைப் பற்றி என் அபிப்பிராயத்தை எழுதுகிறேன். அநேகர் தினம் இப் பானங்களை பன்முறை அருந்தியும், மற்றும் அநேகர் முக்கியமாக கிரா மங்களில் இதை அருந்தாமலும் வாழ்ந்து இருக்கின்றனர் என்பது நிச்சயம். ஆயினும் இவ்விஷயத்தில் என் அனுபவத்தையும் எழுது கிறேன். சுமார் எனக்கு இருபது வயது இருக்கும்போது அது வரை யில் காப்பி தண்ணீரையும் தேனீரையும் குடித்து வந்த நான் அடிக்கடி கீல் வாய்வினால் பாதிக்கப்பட்டு வந்தேன். அதற்கு ஏதாவது மருந்து கொடுக்கும்படி எங்கள் குடும்ப நண்பர் டாக்டர் நஞ்சுண்டராவ் அவர் களை நான் கேட்டபோது அவர் இதற்கெல்லாம் மருந்தென்ன சம் பந்தம் இந்த சிறு வியாதி உன்னை கொல்ல போகிறதா என்ன ? என்று கேட்டார். அதற்கு நான் "என்ன ஐயா வியாதி என்றால் மருந்து