பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

33

#3 மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. கடைசியில் பிராணயாமம்’ என்னும் மூச்சி பயிற்சியையும் இதில் ஒரு பங்காக்கி இருக்கிறேன். இவைகளை எல்லாம் பற்றி விளக்கிக் கூற படங்கள் வேண்டுமே யொழிய வார்த்தையினால் விளக்குவது எளிதல்ல. மொத்தத்தில் இதன் முக்கிய பாகம் நமது உடலில் உள்ள ஒவ்வொரு அவ யவத்திற்கும் வேலை கொடுத்து வணங்கச் செய்வதாம் இதை நான் எப்படி செய்கிறேன் என்று பார்க்க இதைப் படிக்கும் எனது நண்பர்கள் யாராவது விரும்பினால் என் வீட்டிற்கு வந்தால் இந்த வியாயாமத்தை செய்து காட்டுகிறேன். வேண்டும் என்றால் அவரவர்களுடைய வயதுக்கும் தேகஸ்திதிக்கும் வேண்டிய மாறுபாடு களை அவரவர்கள் செய்து கொள்வது நலம். ஏதோ அவசரத்தினாலோ அல்லது காலம் இன்மையினாலோ எனது நித்திய தேகப் பயிற்சியை சில தினங்களில் மிகவும் குறைத்துக் கொண்ட போதிலும் அதில் அடங்கிய பிராணயாம பயிற்சியை மாத்திரம் குறைப்பதில்லை.-இந்த பிராணயாமத்தை இடைவிடாது செய்து வருவதினால் நான் மிக்க பல னடைந்திருக்கிறேன் என்று உறுதியாய்க் கூறுவேன். இந்தப் பழக்கம் ஆரியர்களுக்குள் அநேக ஆயிரம் வருடங்களாக அனுசரிக்கப்பட் டிருக்கிறது, மேல் நாட்டாராகிய ஐரோப்பியர்கள் இதன் நன்மையை அறிந்து அனுசரிக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆங்கிலேயர் தேகப் பயிற்சியில் இந்த பிராணயாமம் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. இதற்கு அவர்கள் " டீப் ப்ரீதிங் எக்ஸர்லைஸ் ' என்று பெயரிட்டிருக் கின்றனர். மேற் சொன்ன படியே இத் தேகப் பயிற்சி யெல்லாம் சாயங்காலங்களில் நான் வீடு திரும்பியவுடன் செய்து முடித்த பிறகே நான் இராப் போஜனம் கொள்கிறேன். எக்ஸர்சைஸ் செய்வதில் இரண்டு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒன்று போஜனம் கொண்ட உடனே எக்ஸர்சைஸ் செய்யக் கூடாது. இரண்டு தேகப் பயிற்சியினால் உடல் வியர்த்தால் அந்த வியர்வையை நன்றாய் துடைத்துக் கொண்டே அறையை விட்டு வெளியேற வேண்டும்.

மேற் சொன்ன வியாயாமங்கள் தவிர தினம் இரண்டு மூன்று மைல் நடக்க வேண்டுமென்று தீர்மானித்து அப்படி செய்து வருகி றேன். நடு வயதிற்கு வந்தவர்களுக்கு இந்த நடக்கும் பயிற்சி இன்றி யமையாததாகும். நான் மோட்டார்கார் வைத்துக் கொண்டிருந்த காலத் தில் கூட சமுத்திரக் கரைக்கு போய் காரை விட்டு இறங்கி இரண்டு மூன்று மைல் காலால் நடந்து வந்தேன். தற்காலம் கார் இல்லாமையா