பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2

3 உணவு உண்டல் -உயிர் வாழ்வதற்கே உணவு உண்டல் இன்றியமையாததாம். யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாய் முடியும் என்று தமிழ் நாட்டு பெரியார் ஒருவர் உலக வாழ்க்கையைப் பற்றி கூறியுள்ளார். ஆகவே சரியான உணவை கொள்ளுதலும், சரியான காலங்களில் அதை கொள்ளுதலும் சரியான விதத்தில் அதை கொள்ளுதலும் தேக ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றி அமையா காரணங்கள் ஆகும். இவைகளைப் பற்றி நான் ஆராய வேண்டி வந்ததற்கு காரணத்தை முதலில் கூறுகிறேன். எனது ஏறக்குறைய 10 வயது வரையில் இராத்திரியில் சாப்பிட் டால் அடிக்கடி வாந்தியாகிவிடும். இதைத் தடுப்பதற்காக என் தாயார் என்னென்னவோ யுக்தி செய்து பார்த்தார்கள். உண்ட உணவை செரிக்கச் செய்ய சக்தியில்லாத எனக்கு என்னென்னவோ மருந்துகள் கொடுத்துப் பார்த்தார்கள். கடைசியில் அக்காலத்தில் வைத்திய பரீட்சையில் முதன் முதலில் எம். டி. பரீட்சையில் தேறின இந்திய ராகிய டாக்டர் தனகோடி ராஜீ எனக்கு காட்லிவர் ஆயில் கொடுக்கச் சொன்னார். அதனால் கொஞ்சம் குணமடைந்தேன். இருந்த போதி லும் ஒற்றை நாடியாய் மிகுந்த பலஹீனமுடையவனாய் இருந்த நான் அநேகம் வருடங்கள் வாழ்ந்திருப்பது கடினம் என்று பலரும் சந்தே கப்பட்டார்கள். அக்காலத்தில் பிரபல ஹைகோர்ட் வக்கீலாயிருந்த ஸ்ரீ வி. சுந்தரம் சாஸ்திரிகள் என்பவர் என் எதிரிலேயே என் தகப்ப னாரிடம் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் பிள்ளை சம்பந்தம் 30 வயதுக்கு மேல் வாழமாட்டான்' என்று கூறியது. எனக்கு இன்னும் ஞாபகமிருக் கிறது. அப்பொழுது எனக்கு சுமார் 12 வயதிருக்கும். என் ஆயு ளுக்கு சாஸ்திரியார் வைத்த தவணையைக் கேட்டு பயந்தவனாய் என் உடலை தேற்றிக்கொண்டு நெடுங்காலம் வாழ்வதற்கு என்னென்ன சாதனங்கள் உள என்று அறிய ஆரம்பித்து அவைகளை வழக்கத்தி லும் கொண்டுவந்தேன். இந்த பீடிகையுடன் அச்சாதனங்களைப் பற்றிய விவரங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூறுகிறேன். உணவு கொள்ளுமுன் நமது பரதகண்ட மெங்கும் பூர்வீகமான ஒரு வழக்க முண்டு-அதாவது கைகால்களை சுத்தி செய்துகொண்டு வாயைக் கொப்பளித்து விட்டு பிறகு தான் சாப்பிட உட்காருவதாம். இந்த வழக்கம் ஒரு முக்கிய வழக்கம். இதனால் கையில் ஏதாவது நுண்ணிய கிருமிகள் இருந்தபோதிலும் அல்லது அழுக்கிருந்த போதி