பக்கம்:நீண்ட ஆயுளும் தேக ஆரோக்யமும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

39

 யம். இது ரகசியமான விஷயம் இதைப்பற்றி பேசக்கூடாது என்று சும்மாயிருத்தல் தவறாகும். மேற்சொன்ன விதிகளை கவனியாது. எனது சில வாலிப நண்பர்கள் நோய்வாயில் அகப்பட்டு மடிந்திருக்கி றார்கள். ஆகவே இதைப்பற்றி நான் மிகவும் வற்புறுத்தவேண்டியவனா யிருக்கிறேன். மிகவும் அவசியமாக பருவம் வாய்ந்த வாலிபர்கள் அறியவேண்டிய விஷயம் இன்னொன்று உண்டு. அதாவது ஒவ்வொரு துளி ரேதசும் 95 துளி ரத்தத்தினால் உண்டாகிறது. ஆகவே இந்த உயிர் பொருளை செலவிடுவதில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண் டும் என்பதை எல்லா வாலிபர்களும் அறியவேண்டும் இவ்விஷயத்தில் ஜாக்கிரதையாயிராத எந்த மனிதனும் வயோதிகத்தில் ஆரோக்ய முடையவனாய் இருக்க முடியாது ஏன்-வயோதிகம் என்று எண்ணப் பட்ட அறுபது எழுபது ஆண்டுகளையே எட்டிப்பார்க்க முடியாது.


மேற்சொன்ன சுகாதார விதிகளை அனுசரிப்பதுடன், அடியில் கண்ட சிறு விதிகளையும் அனுசரிப்பது நல்லது. (1) கால் பாத ரட்சை இல்லாமல் வீதிகளில் நடக்கக்கூடாது. (2) அப்படி ஏதாவது நடக்கும்படி நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் கால்களை கல்லின்மீது நன்றாய் தேய்த்து கழுவ வேண்டும். (3) வாயில் எந்நேரமும் கிராம்பு, ஏலக்காய், கொட்டைப் பாக்கு முதலியவைகளை போட்டுக்கொண்டு மென்றுக் கொண்டிருக்கலாகாது. (4) கை கால்களில் வளரும் நகங்களை வாரத்திற்கு ஒரு முறையாவது குறைத்துக் கொள்ளவேண் டும். (5) கை நகங்களை பற்களினால் கடிப்பது மிகவும் தவறாகும். (6) ஆடவர்கள் வாரத்திற்கு இருமுறையாவது க்ஷவரம் செய்துக் கொள்ளுதல் நலம். (8) மூன்று மாதத்திற்கு ஒரு முறை பேதிக்கு சிற்றாமணக்கெண்ணெயை சாப்பிடுதல் நல்லது. (9) மாதத்திற்கு ஒரு முறையாவது காதுகளில் உள்ள குறும்பிகளை ஜாக்கிரதையாய் நீக்க வேண்டும். (10) குளித்தவுடன் தோய்த்த சுத்தமான வஸ்திரங் களை தினம் அணியவேண்டும். கந்தையாயினும் கசக்கிக் கட்டு என்னும் பழமொழியை காண்க. (11) உட்கார்ந்திருக்கும்போதும் நடக்கும்போதும் நேராக நிமிர்ந்தே இருக்கவேண்டும், அதாவது முதுகு கூனி இருக்கலாகாது. (12) உடலில் எந்த பாகத்திலும் இரத்த ஓட்டம் தடைசெய்யும்படி எதனாலும் இறுக கட்டலாகாது. (13) மாதத்திற்கு ஒரு முறை தலைமயிரை வெட்டிக்கொள்ளவேண்டும் (14) படுக்கை அறையில் சுத்த காற்றோட்டமாக இருக்கவேண்டும். (15) வருடத்திற்கு ஒரு முறையாவது வசிக்கும் வீடு முழுவதும்