உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

முதல் உள பண்டம் கொண்டு வாணிபம் செய்து,
அதன் பயன் உண்ணா வணிகரும் பதரே.67

வித்தும் ஏரும் உளவா இருப்ப,
எய்த்து, அங்கு இருக்கும் ஏழையும் பதரே.68

தன் மனையாளைத் தாய் மனைக்கு அசுற்றி,
பின்பு அவட் பாராப் பேதையும் பதரே.69

தன் மனையாளைத் தனிமனை இருத்தி,
பிறர் மனைக்கு ஏகும் பேதையும் பதரே.70

தன் ஆயுதமும் தன் கையில் பொருளும்
பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே.71

வாய்ப் பறை ஆகவும், நாக் கடிப்பு ஆகவும்,
சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்;72

பொய்யுடை ஒருவன் சொல் வன்மையினால்.
மெய்போலும்மே; மெய் போலும்மே.73

மெய்யுடை ஒருவன் சொல மாட்டாமையால்,
பொய் போலும்மே; பொய் போலும்மே.74

இருவர்தம் சொல்லையும் எழு தரம் கேட்டே.
இருவரும் பொருந்த உரையார் ஆயின்,
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்
மனமுற மறுகிநின்று அழுத கண்ணீர்,
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்,
வழிவழி ஈர்வது ஓர் வாள் ஆகும்மே.75

பழியா வருவது மொழியாது ஒழிவது.76

சுழியா வருபுனல் இழியாது ஒழிவது.77

துணையோடு அல்லது நெடு வழி போகேல்!78

புணைமீது, அல்லது நெடும் புனல் ஏகேல்!79

எழில் ஆர் முலை வரி விழியார் தந்திரம்
இயலாதன கொடு முயல்வு ஆகாதே.80

வழியே ஏகுக! வழியே மீளுக!81

வைகாண் உலகிற்கு இயல்பாம் ஆறே.82