இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உலக நீதி
(உலகநாத பண்டிதர்)
கடவுள் வாழ்த்து
உலகநீதி புராணத்தை உரைக்கவே,
கலைகளாய் வரும் கரிமுகன் காப்பு.
நூல்
ஓதாமல் ஒரு நாளும் இருக்கவேண்டாம்:
ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்;
மாதாவை ஒரு நாளும் மறக்கவேண்டாம்;
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்.
போகாத இடம் தனிலே போகவேண்டாம்;
போகவிட்டு, புறஞ்சோல்லித் திரியவேண்டாம்;—
வாகு ஆரும் குறவருடை வள்ளி பங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!
நெஞ்சு ஆரப் பொய்தன்னைச் ரொல்லவேண்டாம்;
நிலை இல்லாக் காரியத்தை நிறுத்தவேண்டாம்;
நஞ்சுடனே ஒரு நாளும் பழகவேண்டாம்;
நல் இணக்கம் இல்லாரோடு இணங்கவேண்டாம்;
அஞ்சாமல் தனி வழியே போகவேண்டாம்;
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்கவேண்டாம்:—
மஞ்சு ஆரும் குறவருடை வள்ளி பங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!