17
மனம் போன போக்கு எல்லாம் போசுவேண்டாம்;
மாற்றானை உறவு என்று நம்பவேண்டாம்;
தனம் தேட உண்ணாமல் புதைக்கவேண்டாம்;
தருமத்தை ஒரு நாளும் மறக்கவேண்டாம்;
சினம் தேடி, அல்லலையும் தேடவேண்டாம்;
சினந்திருந்தார் வாசல் வழிச் சேறல்வேண்டாம்;—
வனம் தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!3
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரியவேண்டாம்;
கொலை களவு செய்வாரோடு இணங்கவேண்டாம்;
கற்றவரை ஒரு நாளும் பழிக்கவேண்டாம்;
கற்புடைய மங்கையரைக் கருதவேண்டாம்;
கொற்றவனோடு எதிர்மாறு பேசவேண்டாம்;
கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்;-
மற்று நிகர் இல்லாத வள்ளி பங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!3
வாழாமல் பெண்ணை வைத்துத் திரியவேண்டாம்;
மனையாளைக் குற்றம் ஒன்றும் சொல்லவேண்டாம்;
வீழாத படு குழியில் வீழவேண்டாம்;
வெஞ்சமரில் புறங்கொடுத்து மீளவேண்டாம்;
தாழ்வான குலத்துடனே சேரவேண்டாம்;
தாழ்ந்தவரைப் பொல்லாங்கு சொல்லவேண்டாம்;—
வாழ்வு ஆரும் குறவருடை வள்ளி பங்கன்
மயில் ஏறும் பெருமாளை வாழ்த்தாய், நெஞ்சே!3
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரியவேண்டாம்;
மதியா தார் தலைவாசல் மிதிக்கவேண்டாம்:
மூத்தோர் சொல் வார்த்தைதனை மறக்கவேண்டாம்;
முன்கோபக்காரரோடு இணங்கவேண்டாம்;
வாத்தியார் கூலியை வைத்திருக்கவேண்டாம்;
வழி பறித்துத் திரிவாரோடு இணங்கவேண்டாம்:—
சேர்த்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய், நெஞ்சே!3
நீ.க.—3