உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதிநெறி விளக்கம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ. செழுங்கிளே தாங்குதல் 139 செல்வர்க்குச் சிறிது பொருள் அழியினும் துன்பமில்லை ; அதைக் கொண்டு எளியோர் பலர் பிழைப்பர் என்னுங் கருத்தைப் பிறிது நவிற்சி யணியாகக் கூறினர்.” --ஊ. பு. செ. " இது தமது செல்வத்திற் சிறிது உலகினர் பலரும் அனுபவித்தற் அமையினும் அதனைக்கண்டு அரசர்கள் மன நோவார் என்பதனை யுணர்த்த லில் ஒட்டணி ; பிறிது நவிற்சியணி யெனினும், நுவலா துவற்சியணி யெனினும் ஒக்கும்.” -தி. சு. செ. " கமதாளுகைக்கு ளடங்கிய அரசரும் குடிகளும் கட்டுகின்ற இறைப் பணமாகிய தமது செல்வப் பொருளிற் சிறிது இழந்துவிட்டால் அதைக் குறித் துப் போாசர்கள் துன்பப்படார் ; பொருளுக்காக முயல்கின்ற எளியர் பலர் அவ்விழந்த பொருளைப் பெற்றுத் தமது குடும்பத்தோடு சீவ னஞ் செய்வரென்னும் பொருள்தாலால் இது பிறிதுமொழித லென்னும் அணி ; ஒட்டணி யெனினும் பொருங் தும். இப்பொருளைச் சொல்லிலக் கனத்தார் குறிப்பெச்சம் என்பர்.” -கோ. இ.

  • யானையின் ஒரு கவளம் ஒருகோடி யெறும்புக்கு உணவாவது போலச் செங்கோலோச்சி யுலக முழுதாண்ட அரசர் குடிகளிடத்து வாங்கும் பகுதிப்பணத்திற் சிறிது செலவிடுவாராயின் அதனைக்கொண்டு பல கோடி மக்கள் உயிர்வாழ்வர் என்னும் உபமேயக் கருத்து இச் செய்யு ளாற் போதருதலின் இது புனைவிலி புகழ்ச்சிபணியாம் ; இதனை ஒட்டணி யெனத் தண்டியாசிரியரும், பிறிதுமொழிதல் எனப் பரிமேலழகியாருங் கூருகிற்பர்.” - -வி. கோ. சூ. வாங்குங் கவளத் தொருசிறிது வாய்தப்பின் :

வாங்கும்- வாங்குங்கவளம் என்ற விடத்து, பாகன் கொடுக்க யானை உணவுருண்டையை வாங்கியுண்னும் என்னும் பொருள்பட கிற்கும்.” -இள. கவளம்- ஒரு கைப்பிடி யுனவு ; இது கபளம் என்னும் வடசொற் சிதைவு.” -வி. கோ. சூ. கவளம் - ' ஒருமுறை வாய்க்கொள்ளும் உணவினளவு. -அ. கு. * கவளம் எனில் உணவுருண்டை. அவ்வுருண்டை அதை உண்பார் ஒருதடவை விழுங்கும் அளவுக்குப் போகியதாய் உருட்டப் பட்டதாகும். பொதுவாகக் கவளம் என்பது சமைத்த அரிசியால் (சோற்ருல்) உருட்டிய அல்லது, சமையாத அரிசியோடு சர்க்காை பழம் தேன் முதலிய ஒட்டுப் பொருள்கள் சேர்த்துப் பிசைந்து உருட்டிய, அல்லது மாவில் மேற்சொல் விய ஒட்டுப் பொருள்கள் சேர்த்துருட்டிய ஒர் உணவு உருண்டையைக் குறிக்கும். ஒரு தடவை ஒருயிர் விழுங்கும் எந்த உணவையும் கவளம் . எனச் சொல்வாரும் உண்டு.” -இள. £ ¢ வாங்குங் கவளம் ” என்ற மையால் குடிகள் செலுத்தும் இறைப் பொருள் என்பது குறிக்கப்பட்டது.