உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்ட சோழ மகிழ்கிறார் ! 116 வளவனையும் மறைமுகமாக வாழ்த்தி "நடந்தாய் வாழி காவேரி!" இந்தச் சொல்லோசை தரும் சுவையால் சிலப்பதிகாரக் கானல்வரிப் பாடல்களை நான் பலமுறை படித்துக் களித்த துண்டு! நெடிய பயணத்தில் நீ நடக்கும் போதும் "நடந்தாய் வாழி கண்மணியே!" என்று என் நா, மெல்ல கொண்டுதானிருந்தது! வளம் மலிந்த பகுதியில் காவேரி அசைந்து நடந்தாள் - நடக் கிறாள் - நீயோ; என் உயிர் உடன்பிறப்பே! வறண்ட நிலப் பகுதியில் அல்லவோ; கொளுத்தும் வெயிலில்- தகிக்கும் சாலையில் கால்ஊன்றி(அய்யோ அந்தக் கால்கூட சில நூறு பேர்களுக்கு இல்லையே-) நடந்திட்டாய்! "பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி!" இயற்கையின் எழிற்கொடையும் வளப்பெருக்கும் இடைவெளியின்றி நிறைந்து காணும் சோலைகள் -சுந்தர மயில்கள், சோபிதக் குயில்கள், இன்னோரன்ன இனிய சூழலுக் க்கிடையே காவேரி நடந்திடும் காட்சியையா என் கழகத்துக் கண்மணியே; நீ நடந்திடும் போது சாலையின் இருமருங்கிலும் காண முடிந்தது? இல்லையே! இல்லையே! இளைப்பாறி நிற்கக்கூட ஒரு மரம் இல்லையே! அந்தக் கடும் பாதையில் அல்லவா ஈரோட்டுத்துணி வையும் காஞ்சியின் கனிவையும் இதயத்தில் ஏந்திக் கால்கள் நடை போட்டன. காவேரியின் நடைக்குக் கவிஞர் பெருமான் இளங்கோ வடிகள் காரணத்தைக் கண்டறிகிறார்! செங்கோல் வளையாத அரசின் பெருமையால் காவேரியின் நடையில் ஏற்றம் காண்கிறார்! கழகத்தின் உயிரே! நீ நடந்ததற்குக் காரணம் முற்றி லும் மாறுபட்ட தன்றோ! வளையாத செங்கோலை வாழ்த்திப் பொன்னி நதியாள் நடந்தாள் என்று வாயாரப் போற்றுகிறார் இளங்கோ! இங்கோ நாம்; வளைந்த செங்கோலை வையத்திற்குணர்த் திடவன்றோ வைகை முதல் தாமிர பரணி தீரம் வரையில் நமை வதைத்துக் கொண்டு நடந்தோம்! திருச்செந்தூர் ஆலயத்து விவகாரத்தில் மட்டுமல்ல; தினம் தினம் இந்த ஆட்சியில் நீதியின் நீள்விழிகள் திட்ட