உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117 மிட்டுக் குத்தப்படுகின்ற கொடுமைக்கோர் முடிவு காணவே, நமது நெடிய பயணம் தொடங்கியது! அது, முடிந்துவிட்ட பயணமல்ல! சமூக நீதி கேட்டு சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணம்; எல்லாத் துறையிலும் நீதியை நிலைத்திடச் செய்யும் வரை யில் நின்றிடப் போவதில்லை! செந்தூர்க் கடற்கரையுடன் நமது பயணம் முழுமை யடைந்து விட்ட தாகக் கருதிக் கொள்ளாதே! இது தொடர்பயணம்! தொல்லைகள் தொகை தொகையாக வரினும் "57!" வென்றிகழ்ந்து விட்டுக் குறிக்கோளை நோக்கித் தொடர்ந்து கொண்டேயிருக்கும் பயணம்! இலட்சியப் பயணத்தில் ஒரு கட்டமே இப்போது மேற் கொண்ட இனடயூறு மலிந்த நெடிய பயணம்! எட்டு நாட்கள்! இருநூறு கிலோ மீட்டர்கள்; இரண்டு லட்சம் பேர்! புதிய சரித்திரம்தான்! புரட்சி அத்தியாயம் தான்! நீயும் உன் நெஞ்சில் உறுதியும் இருக்கும் வரையில் இதை விடக் கடுஞ்சோதனைகளை ஏற்றிடவும் நமது கழகம் தயார்! தயார்! இதைப்பலமுறை-பல சோதனைகளில் எனக்குச் செயல் மூலம் உணர்த்திய உடன் பிறப்பே! இப்போதும் என் வேண்டுகோளை ஏற்று-என்னைப் பின் தொடர்ந்த உனக்கு எப்படி நான் நன்றி சொல்வேன்! "நடந்தாய் வாழி கண்மணியே!" என வாழ்த்துகிறேன்; "இனியும் நடப்போம் வா!" என்பதற்கு அச்சாரமாக! அன்புள்ள மு. க. -8