உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வாய்ப்பில்லை என்று எடுத்துக் கூறி இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டார்; வழக்கு கொடுத்தார். ஆனால் இங்கே நிலை என்ன? அறங்காவலர் குழுத் தலைவர் பால கிருஷ்ணன் அவர்களோ, மற்றவர்களோ நீதிபதி பால் கமிஷன் முன்னால் வாய்ப்பு அளிக்கப்படாத. வர்களா என்றால் அவர்களுக்கு அதற்கு நிரம்ப வாய்ப்பளிக் கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்ற கருத்தைச் சொல்ல அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. அரசு எனவே இந்த வேறுபாட்டை உணராமல் தன்னுடைய ஆணையிலே இப்படி கூறியிருப்பதற்காக நான் என்னுடைய கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா பால் கமிஷன் குற்றவாளிகளை யார் என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லையே என்று கேட்கிறார். அதற்கிடையே குற்றவாளிகளை கைது செய்வது எப்படி என்று எதிர்க்கட்சிகளையும் சேர்த்துத்தான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். பால் கமிஷன் அறிக்கையின் 44,45 வது பக்கங்களில் குற்றவாளிகள் யார் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியிருக் கிறார்கள். நான் சுருக்கமாகப் படிக்கிறேன். "சரிபார்ப்பு அதிகாரிக்கு உடனடியாக அவர்கள் முதல் உதவி அளிக்கவோ அவருக்கு மூச்சு வரச் செய்யவோ சிகிச்சை அளிக்கவோ முன்வரவில்லை என்றும் -ஏனென்றால் அவருக்கு மூச்சு வந்து உணர்வு பெற்றால் அவர்களுக்கு எதிராக மரண வாக்குமூலம் கொடுக்கக்கூடும் என்று அவர்கள் அச்சப்பட்டனர் என்றும், 'ஆ' தரப்பினரின் வழக்கறிஞர் கூறிய வாதத்திற்கு இவர்களின் விசித்திரமான போக்கு ஆதரவாகிறது' என்று நீதிபதி பால் குறிப்பிடு கிறார். "அவர்களுக்கு எதிராக மரண வாக்குமூலம் தரக் கூடும்" என்று பால் குறிப்பிடுகிறார். அவர்களுக்கு எதிராக என்பதில் "அவர்கள் யார்?' அதையும் பால் தன்னுடைய அறிக்கையின் 44 வது பக்கத்தில் குறிப்பிடுகிறார். அப்போது அந்த ஆய்வகத்தில் இருந்தவர்கள் யார் யார்? அங்கே யார் யார் இருந்தார்கள் என்று சொல்கிறார் ?