உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் பாலகிருஷ்ணன்; சீனிவாசபாண்டியன்; 21 கோவில் சூப்பரின்டெண்ட் மகாதேவன், நிர்வாக அதிகாரி ராசாராம், கேசவ ஆதித்தன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள் என்று நீதிபதி பால் 44ஆம் பக்கத்தில் குறிப்பிட்ட பிறகும், தெரிந்தும் தெரியாததைப் போல்... குற்றவாளிகள் யார் என்று இன்னமும் அரசாங்கத்திற்கு தெரியவில்லை என்றால் நான் உள்ளபடியே வேதனைப்படு கிறேன். தெரிந்தும் தெரியாததைப்போல் இருக்கிறார்களா என்றுதான் நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். டி பால் கமிஷன் அறிக்கை அவையிலே வைக்கப்படு வதற்கு முன்பு என்னாலே வெளியிடப்பட்டதை யொட்ட -நீங்கள் எடுத்திருக்கின்ற நடவடிக்கையில் பாதி நடவடிக் கையையாவது ஒரு கால் பகுதி நடவடிக்கையாவது -இந்தக் கொலைகாரர்களைக் கண்டுபிடிக்க -கொலைகாரர் களைக் கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்த அரசு எடுத்துக்கொண்டதா என்றால் இல்லை. - பால் கமிஷன் அறிக்கையை முன்கூட்டி வெளியிட்ட நடவடிக்கையை ஒரு பெரிய குற்றமாகக் கூறி- நான் அதை வெளியிட்டதைப் பற்றிய கருத்துக்களை இங்கே விமர்சிக்க விரும்பவில்லை- அதிகாரிகள் கைது செய்யப்பட்டார்கள். சதாசிவம் என்கிற ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. என்னுடைய நேர்முக உதவியாளர் சண்முகநாதன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டது மாத்திர மல்ல; அந்த இரண்டு அதிகாரிகளும் வேலை நீக்கம் செய்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்கள் எந்த அளவிற்கு இழப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதையும் மறந்து விடக்கூடாது. என்னுடைய நேர்முக உதவியாளர் சண்முகநாத னுடைய அடிப்படைச் சம்பளம் 950 ரூபாய், கிராக்கிப்படி 239 ரூபாய்; வீட்டு வாடகைப்படி 165 ரூபாய்; நகர ஈட்டுப் -2