உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 பதவியிலிருந்து விலகுவதல்ல பிரச்சினை! கொலை செய் வதற்கு காரணமாக இருந்தவர்கள் என்று நீதிபதி பால் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்கள்- பேராசிரி யர் அவர்கள் இங்கே அடுக்கடுக்காக எடுத்துக் காட்டினாரே ஆதாரங்களை - அதைப்போல முருகன் ஆலையத்திலே உள்ள உண்டியலை அதிகாரி சுப்பிரமணியபிள்ளை வருவதற்கு முன்பே உடைத்து - அதிலே இருந்த ஏராளமான பொருட் களைத் திருடியவர்கள் ஆயிரம், இரண்டாயிரம், ஐயாயிரம், பத்தாயிரம் என்றால் கூட - அந்தத் திருட்டை மறைப்ப தற்கு ஒரு கொலை செய்திருக்க மாட்டார்கள்! அந்த உண்டியலிலே இருந்த தங்கநகை, வைரவேல்- வைர அட்டிகை ஆகிய இவைகள் அத்தனையையும் திருடிய காரணத்தினாலே, அதை மறைக்க- அவை எங்கே என்று கேட்ட சுப்பிரமணிய பிள்ளையைக் கொலை செய்து முடித் தார்கள். அவர்கள் விலக்கப்பட வேண்டும்; நீக்கப்பட வேண்டும்; அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்; நீதிமன்றத்திலே குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்! விலகி இத்துணைக்கும் மாறாக, "அவர்கள் பதவி விட்டார்கள்! பதவி விலகி விட்டது மாத்திரமில்லை! தாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை நிலைநாட்டுகின்ற வகையில் பதவி விலகி விட்டார்கள்; அந்தத் தூய்மையான வர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நான் நன்றி தெரிவித் துக்கொள்கிறேன்" என்றார் எம். ஜி. ராமச்சந்திரன். . தமிழகத்தை ஆளுகின்ற பொறுப்பை ஏற்றிருக்கின்ற அருமை நண்பர் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர் கள் இந்த அளவிற்குச் சென்று விடுவாரேயானால், இந்த அறங்காவலர்கள் - நீதிபதி பால் அவர்கள், சுட்டிக்காட்டி யதைப் போல நடவடிக்கைக்கு ஆளாக முடியும் என்று நீங்கள் கருதுகிறீர்களா? எனவேதான் எங்களுடைய ஐயம் மேலும் மேலும் வலுத்தது. ஏற்கனவே இருந்த ஐயம் பலப்பட்டது. பயணம் திராவிட முன்னேற்றக் கழகச் சார்பில் சுப்பிரமணிய பிள்ளை படுகொலைக்காக நீதி கேட்டு நெடிய நடத்துகிறோம். இதனால்- நாளைக்கே- இன்றைக்கிருக்கின்ற அரசைக் கவிழ்த்து விடலாம் என்கின்ற கெடு கொண்டது இல்லை நம் கழகம்! நினைப்பு