உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வழக்கம் போல் இரட்டை வேடம்! நான் இன்னும்கூடச் சொல்வேன். இந்த அக்கிரம ஆட்சி அழிய வேண்டும்! அதையே திருத்தி மாற்றிச் சொன் னால், இந்த ஆட்சியினுடைய அக்கிரமங்கள் அழிய வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள் ஆகும்! அக்கிரம ஆட்சி அழிய வேண்டும்! அது ஐந்தாண்டு கால ஜனநாயக கால கட்டத்திலே மக்கள் நடத்தி வேண்டிய காரியம்! முடிக்க அதற்கு இடைப்பட்ட காலத்திலே முடிக்க வேண்டிய காரியம், மக்களால் நடத்தி முடிக்கப்பட வேண்டிய காரியம் ஆட்சியினுடைய அக்கிரமங்கள் அழிக்கப்பட வேண்டும்- நீக்கப்பட வேண்டும் என்பதே ஆகும்! இது ஒவ்வொரு எதிர்க்கட்சியும் தங்களுடைய கடமை யைக் கருதிச் செய்தாக வேண்டிய காரியம்! நான் முதலமைச்சரைக் கேட்கிறேன். நான் இங்கே பேசுவதை - அவர் இங்கே இல்லாவிட்டாலும்-சென்னை யிலிருந்து இந்நேரம் கேட்டுக் கொண்டுதான் இருப்பார். நான் அவரைக் கேட்கிறேன். இந்த அறப்போராட்டத்திலே ஈடுபடாதீர்கள், நெடிய பயணம் தேவையில்லை; அவக்கள் பதவி விலகிவிட்டார்கள் என்றெல்லாம் வேண்டுகோள் விடுக்கின்ற அதே முதலமைச்சர், அதே சென்னை மாநகரத் திலேயிருந்து, அவருடைய கட்சி அலுவலகத்திலேயிருந்த வண்டி வண்டியாக-பெட்டி பெட்டியாக இந்த நெடிய பயணத்திற்கு எதிராக-கடுமையான வாசகங்கள் அமைந்த- உண்மைக்கு மாறான செய்திகள் மலிந்த சுவரொட்டிகள் ஆயிரக்கணக்கிலே அச்சடித்து, மதுரையிலிருந்து திருச் செந்தூர் வரை ஒட்டுங்கள் என்று அனுப்பி வைத்து விட்டு இரட்டை வேடம் போடுகிறார் என்றால் நாங்கள் இவருடைய நல்லெண்ணத்தை எப்படி நம்புவது? நல்லெண் நம்முடைய பி. டி. ஆர். கேட்டார் ஏதோ ணம் உங்களுக்கும், அவருக்கும் இடையிலேயிருப்பதாக, முதலமைச்சர் சொல்லியிருக்கிறாரே, எங்களுக்குத் யாமல், அது என்ன உறவு? என்று. . தெரி நான் பி. டி. ஆர் அவர்களுக்குச் சொல்லிக்கொள் கிறேன். எனக்குப் பழைய கால வரலாறு ஒன்றுதான் நினைவுக்கு வந்தது. சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யாரை தந்தை பெரியார் அவர்கள் சந்தித்து சந்தித்த பிறகு கோவை நகருக்கு வந்த நேரத்தில் அந்த மண்டபத்தில்