உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 பேரறிஞர் அண்ணா அவர்கள் பொரியார் அவர்களைப்பார்த்து "பெரியார் அவர்களே! ராஜாஜியோடு நீங்கள் பேசிய ரகசியம் என்ன? அதை இங்கே பகிரங்கமாகச் சொல்லுங் கள்" என்று கேட்டார். அதைப் போல பி. டி. ஆர். கேட்டதாக நான் எண்ணிக் கொள்ள மாட்டேன். பெரியாரும் ராஜாஜியும் பேசுகிறார்கள் என்றால் இரண்டு முதுபெரும் அரசியல் வாதிகள் பேசிக்கொண்டார்கள். நானும் எம். ஜி. ஆரும் பேசுகிறோம் என்றால், இரண்டு நண்பர்கள் பேசிக்கொண் டார்கள் என்கிற அளவிலேதான் பி. டி ஆர். போன்ற வர்கள் எடுத்துக்கொள்ள வேண்டுமேயல்லாமல்-ஏதோ பெரிய அரசியல் இரகசியம் நாங்கள் இருவரும் பேசினோம். எங்களிடத்திலே பெரிய அரசியல் உறவு இருக்கிறது என்றெல்லாம் அவர் கருதிக் கொள்வாரேயானால் நான் அதை மறுக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எம். ஜி ஆரு டைய அகராதியில் -அவர் யாத்துத் தந்திருக்கின்ற நூலில்- நல்லெண்ணம் என்பதற்கு இலக்கணம் இதுதான். ஒரு பக்கத்திலே வேண்டுகோள்; இன்னொரு பக்கத்திலே சுவ ரொட்டிகள். இந்த இரண்டையும் செய்கிறாரே அவர் தான் எம் ஜி.ஆர். 1 எனக்குத் தெரியும், எப்படியாவது இந்த நெடிய பயணத்தை நிறுத்திவிட்டு, நான் வழக்குத் தொடருகிறேன், கிரிமினல் நடவடிக்கை எடுக்கிறேன் என்றெல்லாம் நம்ப வைத்து விட்டு-நெடிய பயணத்தை நாமும் அவருடைய பேச்சை நம்பி நிறுத்திவிட்டால் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஏமாற்றலாம் என்பதைத் தன்னுடைய கடந்த கால வரலாறுகள் பலவற்றின் மூலம் மெய்ப்பித்துக் காட்டிய வர்தான் இன்றைய தமிழகத்தினுடைய முதலமைச்சர் அவர்கள். சட்டமன்றத்தில் இஸ்மாயில் கமிஷன் அறிக்கை ஏன் இன்னும் வைக்கப்படவில்லை என்று நாங்கள் கேட்டோம் முதலமைச்சர் எம். ஜி. ஆர். "நான் அதை கவர்னருக்கு அனுப்பி ரொம்ப நாளாயிற்று. கவர்னர் எனக்கு இன்னும் அனுப்பவில்லை. அதனால்தான் வைக்கவில்லை" என்றார். மறுநாள் நிருபர்கள் கவர்னரைக் கேட்டார்கள். "இன்னும் ஏன் நீங்கள் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையைப் படித்துப் பார்த்துவிட்டு எம். ஜி, ஆருக்குத் திரும்ப அனுப்பவில்லை?" என்று!