உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டைய ஆட்சியாளர் ஆணவம் மிதிபடும் காலம் வந்தே தீரும்! இந்த மாவட்டத்திலே நடைபெற்ற பயங்கரமான சம்பவம் கோவில் அதிகாரி கொல்லப்பட்டது. ஆண்டவனு ஆபரணங்களைத் திருடினார் என்று அவர் குற்றம் சாட்டப்பட்டார், யாரால்? திருடியவற்களால்- கொள்ளைக் காரர்களால் குற்றம் சாட்டப்பட்டார். யார் அந்தக் கொள்ளைக்காரர்கள்? அந்த ஆலயத்தைச் செம்மையாக நடத்துவதாக உறுதி எடுத்துக்கொண்டு எம். ஜி. ஆரால் நியமிக்கப்பட்டவர்கள்; அறங்காவலர் குழுவைச் சேர்ந்தவர் கள்— அவர்களோடு சேர்ந்த சில அதிகாரிகள் - அவர்களால் கொல்லப்பட்டார். இந்தப் பயங்கர சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்செந்தூர், திருநெல்வேலி, குமரி மாவட்டங்கள் கொந்தளித்தன. குமுறின. ஏன் தமிழகமே ஆர்த்தெழுந் தது. திராவிட முன்னேற்றக் கழகம் மாத்திரமல்ல; அனைத் துக் கட்சிகளும் ஆர்த்தெழுந்தன. அனைத்துக் கட்சிகளும் நீதி விசாரணை வேண்டுமென்று கோரின. வேறு வழியின்றி நான் பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் தந்திகள் கொடுத்தேன். இந்திரா காங்கிரசைச் சேர்ந்த நண்பர் கே. டி. கோசல்ராம் சி.பி. ஐ. விசாரனை- மத்திய போலீஸ் விசாரணை வேண்டுமென்று தந்தி கொடுத்தார். கமிஷன் வைத்த காரணம்! ய திருச்செந்தூர் கோவில் நகை சரிபார்ப்பு அதிகாரி சுப்பிரமணிய பிள்ளையின் மர்மச் சாவு குறித்து பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தர விடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக தமிழகத்தின் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் நீதிபதி பால் அவர் களைக் கொண்டு ஒரு நீதி விசாரணை வைத்தார். அவர் ஆறேழு மாதம் விசாரணை நடத்தி, இறுதியாக அவர் அறிவித்த முடிவு “அதிகாரி சுப்பிரமணிய பிள்ளை தற்கொலை செய்து கொள்ளவில்லை. அவர் உண்டி யலைத் திருடவில்லை. மாறாக உண்டியலைத் திருடிய உன்மத்தர்களால் அவருடைய உயிர் போக்கப் பட்டிருக்கிறது. இது தற்கொலை அல்ல. அவரைக் கொன் றிருக்கிறார்கள். இது கொலைதான்" என்று திட்ட