உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 வட்டமாக அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார். அந்த அக்கிரமக் காரர்கள் சுப்பிரமணிய பிள்ளைக்கு முதலுதவிகூடச் செய்ய வில்லை என்பதை அவர்கள் வாக்குமூலத்திலே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். தூக்கு மாட்டிக் கொண்டதாகச் சொல்லுகிறீர்ளே! அவரைக் கீழே தூக்கிப் போட்டது நீங்கள் தான் என்று சொல்லுகிறீர்களே! அப்போது அவருக்கு உயிர் இருந்ததா என்று பார்த்தீர்களா என்று நீதிபதி கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் பார்க்கவில்லை என்று சொல்லி இருக்கிறார்கள். ஏன் பார்க்கவில்லை என்று நீதிபதி கேட்டதற்கு 'பார்க்க வேண்டிய அளவிற்கு எங்கள் மனதிலே கவலை ஏற்படவில்லை' என்று பதில்சொன்ன பழிகாரர்கள், பாதகர்கள்- பஞ்சமாபாவிகள்- இந்த நாட்டிலே உலவிட வேண்டுமென்று எம்.ஜி. இராமச்சந்திரன், அவர்களுக்கு பட்டயங்கள்- பதவிகள்- பவிஷிகள் அனைத் தையும் மேலும் மேலும் தருவேன் என்று சொல்லுகிறார். நான் தமிழர்கள் பிரதிநிதி! நீ யார் எம்.ஜி.ஆர். இவைகளைக் கேட்க என்று கேட்கிறார். நான் யார்? தமிழகத்து மக்களுடைய பிரதிநிதி என்ற முறையிலேதான் இன்றைக்கு நான் எம்.ஜி. ராமச்சந்திரனைக் கேட்கிறேன். நீதிபதி பால் இதைக் கொலை என்று சொன்னாரா? தற்கொலை என்று சொன்னாரா? எதுவுமே சொல்லவில்லை என்று எம். ஜி. இராமச்சந்திரன் சொல்வது அப்பட்டமான பொய். அன்று மெளனம் பூண்டது! எம்.ஜி.ஆர். மேலும் என்னோடு வாதாடத் தயாரா? சட்டமன்றத்திலே நான் பல ஆதாரங்களை எடுத்து வைத்து பால் கமிஷன் அறிக்கையைப் பக்கம் பக்கமாகப் படித்துக் காட்டி அதற்கு மறுப்பு அளிக்கப்பட்டிருக்கின்ற அரசாங்கத் தினுடைய அறிக்கையிலே இருக்கின்ற ஓட்டை உடைசல்களை எல்லாம் அங்கே எடுத்துச் சொன்னபோது—இன்றைக்கு நான் நடைப்பயணம் புறப்பட்டபோது சட்டமன்றத்திலே வாய்வீரம் பேசுகின்ற எம்.ஜி.ஆர். நேருக்கு நேர் நான் குற்றம் சாட்டியபோது மௌனமாகத்தான் உட்கார்ந்திருந் தார் என்பதை மறந்துவிடக்கூடாது.