உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 “அரசு அதிகாரி சதாசிவத்தையும் என்னுடைய மருமகன் செல்வத்தையும் கைது செய்தீர்களே, எந்தச் சான்றின் அடிப்படையில் கைது செய்து விட்டீர்கள். இன்னும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இந்திரா அம்மை யாரைக் கெ லை செய்ய முயன்றதாக என் மீதும் பேரா சிரியர் மீதும் சாதிக்பாட்சா மீதும் வழக்குத் தொடர்ந்து நாங்கள் இன்னும் நீதி மன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறாமே? எந்த அடிப்படையில் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தீர்கள்?" என்று கேட்டேன். "அந்தச் சமயத்தில் நான் கும்பகோணத்தில் இருந்தேன். இருந்தாலும் சாட்சியங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்” என்று எம். ஜி. ஆர் பதிலளித்தார். பழி வாங்காதவராம்- பசப்புகிறார் எம். ஜி. ஆர். ஏதோ வழக்கு வாபஸ் வாங்கவேண்டும் என்பது எங்களுடைய கவலை அல்ல. நடக்கட்டும் வழக்கு. ஆனால் பழி வாங்காத உத்தமராயிற்றே. பழி வாங்காத, பழி வாங்குகிற எண்ணமில்லாத எம். ஜி. ஆர். தான் என்னையும், பேராசிரி யரையும், பொருளாளர் சாதிக்கையும், ஆற்காடு வீராசாமி யையும், கொள்கை பரப்புச் செயலாளர் கந்தப்பனையும், நெல்லை, மதுரை, கிழக்கு, மேற்கு முகவை, கோவை, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏறத்தாழ 135 அல்லது 140 பேரை குற்றவாளிகளாக ஆக்கி கொலை முயற் சியில் ஈடுபட்டோம் என்று 302, 307, 120-பி ஆகிய சட்டப் பிரிவுகளையெல்லாம் எங்கள் மீது போட்டிருக்கிறாரே; எம். ஜி. ஆருடைய எண்ணம் ஈடேறுமானால், நான் தூக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும். பேராசிரியர் தூக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும். யார் யார் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் தூக்குத் தண்டனை அனுபவிக்க வேண்டும். எம். ஜி. ஆருக்கு எவ்வளவு ஆசை பார்த்தீர்களா? கருணாநிதியும், கழகத்தில் உள்ள தலைவர்களும் தூக்குமேடைக்குச் செல்லவேண்டும். அல்லது குறைந்த பட்சம் ஆயுள் தண்டனையாவது பெற வேண்டும் என்பதால் அல்லவா எங்கள் மீது 302, 307 பிரிவு களின் கீழ் வழக்கு போட்டிருக்கிறார். வாங்காதவராம்-பசப்புகிறார். பாமர இவர் பழி மக்கள் இன்னும் பட்டிக்காட்டில் இருக்கிறார்கள்; படம் பார்த்துச் சாகிறார்கள் என்ற ஒரே ஒரு நம்பிக்கையின்