உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீதி கேட்டு நெடிய பயணம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 காரணமாகத்தான் எம். ஜி. ஆரினால் இந்த நாட்டிலே ஒரு ஆட்சியை நடத்த முடிகிறது. ஒரு கட்சியை நடத்த முடி கிறது. அந்த நம்பிக்கையின் காரணமாகத்தான் தன்னு டைய பளபளப்பையும் பழைய படங்களையும் காட்டிப் படு பயங்கரமான கொலைகளையெல்லாம் மறைத்துவிட முடியும் என்று எம். ஜி. ஆர். கருதுகிறார். வெங்கடாசலம் கொலை! ஒரு நாட்டிலே கொலை நடைபெறுவதும், நடைபெற்ற கொலைகளின் உண்மைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் போவதும் இயற்கை. காமராசருடைய ஆட்சியிலேகூடச் சில கொலைகள் கண்டுபிடிக்க முடியாமற் போயிருக்கலாம். பேரறிஞர் அண்ணா ஆட்சியிலே, பெரியவர் பக்தவத்சலம் ஆட்சியிலே, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சியிலே, ஏன்- என்னுடைய தலைமையிலே நடைபெற்ற ஆட்சியிலே கூட ஒன்றிரண்டு கொலைகள் கண்டுபிடிக்கப்படாமல் தடயங் களே இல்லாமல்கூட போயிருக்கலாம். ஆனால் அதைப்போல் எம். ஜி. ஆர். ஆட்சியிலே இந்த நான்காண்டு காலத்திலே ஒரு சில கொலைகள் தடயங்கள் இல்லாமல் கண்டுபிடிக்கப் படாமல் போய்இருக்கலாம். தஞ்சாவூரிலே வெங்கடாசலம் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர். ஐந்தாண்டு காலமாகக் காணவில்லை. 'கொலை பட்டார் என்பது தான்மார்க்சிஸ்ட் கட்சியினருடையவாதம். கொலை செய்யப்பட்டார் என்பதுதான் தஞ்சை வட்டாரத் திலே உள்ள அத்தனை பேரும் நம்புகின்ற செய்தி. அந்த வெங்கடாசலத்தை யார் கொலை செய்தார்கள் என்று இந்த நான்காண்டு கால எம். ஜி. ஆர். ஆட்சியிலே கண்டுபிடிக்க வில்லை. பிரேமா கொலை! அவரை செய்யப் சென்னையிலே இந்திரா நகரிலே பிரேமா என்ற பெண் மணி கொலை செய்யப்பட்டாள். இதுவரையிலே அந்தக் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அ.தி.மு.க. வைச் சேர்ந்த புட்டூர் தண்டபாணி என்ற காண்ட்ராக்டர் அ.தி.மு.க வினராலேயே கொலை செய்யப்பட்டார். அதற் கானஆதாரங்களை இறந்து போனவருடைய கடிதங்களை யெல்லாம்கூடச் சட்ட மன்றத்திலே எம். ஜி. ஆருக்கு நேராகப் படித்து அவரிடத்திலே கொடுத்தேன். எம். ஜி. ஆர். என்ன செய்தார் தெரியுமா? இந்தக் கடிதங்கள் எப்படி கருணாநிதிக்கு வந்தது? என்று ஆராய்ந்