பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலே பலவாறு விளக்கிளுேம் அல்லவா? அவர் இந்தச் சிவகாருண்யம் உயிர் உள்ள பொருள்களிடத் துத்தான் காட்டவேண்டும் என்பதில்மட்டும் கருத் துடையவர் அல்லர். உயிர் அற்ற சடப்பொருளி ளிைடத்தும் காட்டவேண்டும் என்ற கருத்துடையவர். இதனே அவரது உரைகளே அறிந்தபின் காம் வியவா மல் இருக்க முடியாது, கீழ்வரும் வார்த்தைகள் இராமலிங்க வள்ளலா ருடைய வாய் மொழிகள். "அன்பர்களே இரு வயோதிகர்கள் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரது கால் பட்டு வழியில் கிடந்த மண் கட்டி உடைந்துவிட்டது. அதைக் கண்ட, உடன் இருந்த மற்ருெரு முதியர் மூர்ச்சையாயினர். பக்கலில் இருந்த பெரியவருக்கு உடன் வந்த நண்பர் திடுமென மூர்ச்சையாயினமைக் குரிய காரணத்தை அறிந்திலர். ஒருவேளே இவருக்கு மார் அடைப்பு வருதல் வழக்கம்போலும் என்று கருதி அவரது மூர்ச்சை தெளிதற்குரிய செயல்களைச் செய்து மூர்ச்சையினைத் தெளியச் செய்தனர். அவர் மூர்ச்சை தெளிந்து எழுந்த பின்னர், மூர்ச்சை வந்த தற்குரிய காரணம் இன்னது என்பதைக் கூறுமாறு நண்பரை வேண்டினர். அதற்கு மூர்ச்சையுற்ற முதிய வர் அன்பரே அழகுடன் இருந்த மண்கட்டி உம் கால்பட்டு உருக்குலந்து அழிந்து ஒழிந்ததே என்ப