பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—#4— ரெட்டியார் என்பவர் குட்டகோயால் துன்புற்றபோது அக்நோயைப் போக்கினர். முத்து நாராயண ரெட்டி யார் கண்ணுெளி மங்கி இருப்பது உணர்ந்து, கண் ைெளிபெறச்செய்தார். இப்படிப் பலருடையநோய் களைத் தீர்த்தமைக்குக் காரணம், தாம் சிறந்த சித்தர் என்பதை விளக்கவோ, கைதேர்ந்த வைத்தியர் என் பதை வற்புறுத்தவோ அன்று. தம்மாட்டு இருந்த சீவ காருண்ய ஒழுக்கமே அவரை இவ்வாறெல்லாம் மக் கள் படும் அவத்தைகளைத் தீர்க்கச் செய்தது. இந்தச் சிவகாருண்ய முதிர்ச்சி தருமசால் ஒன்றை நிறுவவேண்டும் என்று கருதத் தொடங்கியது. அதனே வடலூர் என்னும் இடத்தில் கிறுவுதல் என்து வள்ளலார் உள்ளம்கொண்டார். வேட்டவலம் என்னும் ஊரில் உள்ள பாம்பு முதலிய கொடிய விடச் சந்துக்களைப் பிடித்து ஊருக் குப் புறத்தே காடுகளில் கொண்டுபோய்விடுமாறும், பிடாரன நியமிக்குமாறும் அவ்வூர் ஜமீந்தாருக்குக் கட்டளே பிறப்பித்தார். அப் பிடாரனுக்குத் தக்க ஊதியம் கொடுக்குமாறும் கூறினர். அவ்வூரில் கடந்த பலியிடும் வழக்கத்தையும் சமீந்தார் ஆணேப்படி கிறுத்துமாறும் கட்டளையிட்டார். வள்ளலாராம் இராமலிங்க சுவாமிகட்குச் சீவ காருண்யத்தில் இருந்த முதிர்ந்த பற்றினேக் குறித்து