பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டபொம்மன் புதுக்கோட்டைத் திருக்களம்பூர் என்னும் ஊரில் தங்கிப் பின்னர்ப் புதுக்கோட்டை நோக்கிப் புறப்பட்டு அவ்வூரை வந்து சேர்ந்தனர். இந்தச் செய்தி அறிந்த பானர்மென் படையை அங்கு அனுப்பிக் கைதியாக்கச் செய்தனர். அவ்வாறே கட்டபொம்மனும் உடன் இருந்த தம்பிமார்களும் கைதி செய்யப் பட்டனர். வீரபாண்டியன் கட்ட பொம்மன் கயத்தாறு என்னும் ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கம்பெனியார் விசாரணை நடத்தி அதில் வீர பாண்டியன் கட்டபொம்மன் பலவிதக் குற்றத்திற் குரியவர் என்பதை விளக்கி, அவரைத் துரக்கிலிட உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி தாக்கில் இட்டு கட்டபொம்மனே மாய்த்தனர். வீரபாண்டியன் கட்டபொம்மன் இயற்கை மரணம் உற்றிலர். செயற்கை மரணமே உற்றனர். இதற்குக் காரணம் என்னே? தம் காட்டுப் பெரு மையை கிலே நிறுத்துவதற்காகவே யாகும். தன்மான உணர்ச்சிக்காகவேயாகும். மானம் உடையவர் பிறர்க்கு வணங்காமல் உயிர் விடுவர் என்பதைக் காட்டுவதற்காகவேயாகும். நாம் பிறருடைய ஆட்சிக்கு உட்படாது சுய ஆட்சிபெற்றுத் திகழ்வதற்கேயாகும். காட்டுப்பற்றும் சுதந்திர உணர்ச்சியுமே அவரை நீதி-3.