பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சமூகத்தொண்டு கடவுளே விடத் தொண்டர்களுக்குப் பெருமை. அதிகம். தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெர்திே என்று ஒளவைப்பிராட்டியார் கூறியுள்ளதும் கம் சினேவிற்கு வருதல்வேண்டும். அத் தொண்டர்கட்கு அத்தகைய பெருமை ஏன் கூறப்படுகிறது . அவர்களது அருந்தொண்டே அப்படி அவர்கள் சிறப்பித்துச் செப்பப்படுதற்குரிய காரணம் ஆகும். தொண் டினைச்செய்ய வேண்டும் என்பதே தெய்வத்தின் உள் ளக்கிடக்கையும் பெரியோர்களின் உள்ளக்கிடக்கை யும் ஆகும். ' என் கடன் பணி செய்து கிடப்பதே' என் பது அப்பர் பெருமானர் அமுத வாக்காகும். நாம் கம் கடமையாகப் பணிபுரிந்தால் நம்மைத்காக்க வேண்டி யது ஆண்டவன் கடமையாகும். 'தன் கடன் அடியே g அனயும் தாங்குவது ' என்று என் கடன் பணிசெய்து கிடப்பதே என்றுகூறிய அப்பரே பாடிப் போயினர். இந்தத்தொண்டு ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாகவும் இருக்கலாம். ஆன்மாவுக்குச் செய் யும் தொண்டாகவும் இருக்கலாம். இவ்விரண்டனுள் ஆன்மாக்களுக்குச் செய்யும் தொண்டே சிரிய தொண் டாகும். இத்தொண்ண்டத் தெய்வமும் வரவேற்கும். ' எவ்வுயிரும் பராபரன் சங்கிதியாகும்' என்பது நம்