பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—38— கும்போது, வெறும் கல்வியினே மட்டும் போதிக்காமல் அவர்கள் கன்னடத்தை பெறத்தக்க முறைகளையும் கற் விக்க வேண்டும். நம் காட்டில் பலர் பொறுப்பு உணர்ச்சியும், கடமை உணர்ச்சியும் அற்றவர்களாக உள்ளார். அவர்களுக்கு இந்த உணர்ச்சிகள் வருமாறு செய்ய வேண்டும். மக்களுக்கு இத்தகைய உணர்ச்சிகள் இல்லை என்பதைப் பலவாறு எடுத்துக்காட்டலாம். கடைபாதை என ஒன்று தெருக்களில் அமைக் துள்ளதை யாவரும் அறிவர். ஆளுல், அந்தநடைபாதை யுைப் பயன்படுத்தாது நடுத் தெருவில் கடந்து வண்டி யில் அகப்பட்டு வண்டி ஒட்டியைப் பலர் கோபித்துக் கொள்கின்றனர். கடைபாதையில் நடவாதது நம் குற் றம் என்று அறியமாட்டாதவராய் உள்ளார். அப் படியே ' அசுத்தம் செய்யாதே ' என்று எழுதப்பட்ட இடத்திலேயே அசுத்தம் செய்கின்றனர். அப்படிச் செய்வது தவறு என்பதை உணராமல் இருக்கின்றனர். மக்கள் நன்மைக்காக விளக்குகள் அமைக்கப்பட்டால், அவ்விளக்கினே உடைத்தும் பல்புகளைக் களவாடியும் போகின்றனர் அறிவற்ற மக்கள். அத்தகையவர்கள் அறிவு பெறும் முறையில் அவ்வப்போது சொற் பொழிவுகளைச் செய்து மக்கள் இத்தகைய இழி செயல்களைச் செய்யாதவாறு அறிவு கொளுத்த வேண் டும். இதுவும் தொண்டின் பால்படும்.