பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—69– ஒருநாள் பூரு ஆண்டாள் மலர் மாலை அணிந்து தன் அழகைக் கண்ணுடியில் கண்டு களித்துக்கொண் டிருக்கையில், விஷ்ணுசித்தர் பார்த்துவிட்டனர். பின்னர் அம் மாலயைச் சாத்துதலும் செய்யாது வருத்தத்துடன் உறங்கியும் போயினர். திருமால் அவரது கனவில் தோன்றி " அன்பணே எனக் கெனத் தொடுத்த மாலையினை சின் மகள் அணிந்து கொண்டனளே என்று கவலை கொள்ளாதே. அவள் அணிந்து கொடுக்கும் மாலேயே எனக்கு அதிக பிரீதியினை அளிப்பதாகும். ஆகவே, தினமும் அவள் அணிந்த பின்பே எனக்குக் கொண்டுவந்து அணிக. மேலும், அவள் என்னையே மணக்க விரும்பியுள்ளரிள். அவளே அலங்களித்துத் திருவரங்கப் பெருங்கோயிலுக் குக் கொணர்க." என்று கூறியருளினர். பெரியாழ்வார் எழுந்து தம் திருமகளின் அருமை பெருமைகளை அறிந்து மகிழ்ந்து, திருமால் கட்டளைப் படி அவளே அலங்கரித்துத் திருவரங்கக் கோயிலுக் குச் சென்று அரங்கநாதனிடம் ஒப்படைத்தனர் அரங்கநாதனும் ரீ ஆண்டாளே ஏற்றருளினன். இவ் வாறு அரங்கன் ஆண்டாளே என் ஏற்றுக்கொண்ட னன்? அவளது இறை யன்பை அதாவது கடவுள் உணர்ச்சியைக் கண்டன்ருே ஆகவே, நாமும் கடவுள் உணர்ச்சியுடையவராய் இருத்தல் வேண்டும்.