பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயற்சி : மக்களுக்கு முயற்சி வேண்டிற்பாலது. முயற்சி யின்றிச் சோம்பி இருத்தல், உயர்நிலையிலிருந்து, தாழ் நிலைக்குக் கொண்டு சேர்க்கும். செல்வம் வந்து நம்மைச் சேராது ஒழியும்; தரித்திரமே கம் மிடம் தலை தூக்கி சிற்கும். முயற்சி என்னும் குணம் கம்பால் அமையப் பெறுமாயின், செல்வம் வழி கேட்டுக்கொண்டு தானே நம்மை வந்தடையும். இடைவிடா முயற்சியினால், ஊழைக் கூடவென்று விடலாம். காம் தொடங்கிய காரியம் சில பல தடை களால் தடைபட்டு கின்று போகவும் செய்யும். அக் காலங்களில் நாம் உள்ளம் தளர்தல் கூடாது. கமது விடாமுயற்சியினல் மேலும் மேலும் முய லுதல் வேண்டும். தோல்வியுற்ருலும் உள்ளம் சோர்தல் கூடாது. முயற்சிக்கு விதியையும் வெல் அலும் ஆற்றல் உண்டு என்று அன்ருே நம் நூல்கள் கூறுகின்றன. 'உலையா முயற்சி களைகணு ஊழின் வலிசிந்தும் வன்மையும் உண்டே- உலகறியப் பான்முன் தின்று மறலி உயிர்குடித்த கான்முளையே போலும் கரி'