பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

—71-- என்று குமரகுருபரர் கூறியிருப்பதையும் உணரலாம். அதாவது, ' தளராது முயலும் முயற்சிக்கு விதியின் வன்மையினே அழிக்கும் சக்தி உண்டு. இதற்குச் சான் ருக உலகம் எல்லாம் உணரக்கூடிய அளவில் விதியின் முளையையே அழித்து எமனது உயிரையும் வாங்கிய பிள்ளையாகிய மார்க்கண்டேயனே போதிய சான்ரு வான்' என்பது. தளராத முயற்சிக்கு மேற்கு நாட்ட வர் வரலாறுகளிலும் பல எடுத்துக்காட்டுகள் உள் ளன. ராபர்ட் புரூஸ் வரலாற்றினையும் ஈண்டு உணர்தல் தக்கதே ஆகும். ராபர்ட் புரூஸ் என்பவன் ஸ்காட்லாந்து மன்னன். அவன் எதிரிகளோடு டோரிட்டுப் போரிட்டுப் பல முறை தோற்றுப்போயினன். ஐந்துமுறையும் போரிட நேர்ந்தது. இந்த ஐந்து தடவைகளிலும் தோல்வியே அவனுக்குக் கிடைத்த பரிசாகும். என்ருலும், ஆருவது தடவையும் தன் எதிரிகளைப் பலமாகத் தாக்கிப் போரிட்டான். அந்தோ! இந்த ஆருவது முறையும் தோல்வியேயு ற்ருன். இனிப் போரே வேண்டா என்ற மனத்தோடு காட்டைவிட்டு வெளியேறினன். ஒரு மலையடிவாரத்தை அடைந்தான். அம் மலேயில் ஒரு குகையைக் கண்டு, அக் குகையில் போய்ப் படுத்துக் கொண்டான். மலேக்குகைக்கு மேலே ஒரு சிலந்தி கூடு கட்டிக் கொண்டிருந்தது, சிலர்தி, கூடு கட்டுகையில் அக்