பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— ?2– கூட்டினின்றும் தொங்கிய இழையின் வழியே அது தொங்கிக்கொண்டிருந்தது; அச் சிலந்தி அல் விழையின் துணைகொண்டு மேலே கூரையில் இருக்கும் கூட்டை அடைய முயன்றுகொண்டிருந்தது. அது மெல்ல மேலே சென்று, கூட்டை அடைய முடியாமல் மீண்டும் முன்பேரல் தொங்கிக்கொண்டிருந்தது, என்ருலும், சிலந்தி தான் கூட்டினை அடையவேண்டும் என்றிருந்த எண்ணத்தை விட்டுவிடவில்லை. மீண்டும் முயன்று இழை வழியே மேலே செல்ல முயன்றது. அப்படி முயன்றும் கூண்டினே அடைய இயலாமல் நால்வழியே தொங்க நேரிட்டது. இப்படி ஆறுதடவை முயன்று முயன்று கூட்டினே அடையப்பெருமல், இழைவழியே தொங்க நேரிட்டும், சிலந்தி விடா முயற் சியுடன் எவ்வாறேனும் கூட்டினை அடையவேண்டும் என்பதற்காக ஏழாவது தடவையும் இழைவழியே மெல்லே எறி. இறுதியில் கூட்டினே அடைந்தது. இவ் வளவையும் ராபர்ட் புரூஸ் குகையில் படுத்துக் கொண்டே கவனித்தனன். அவனுக்கு அப்போது ஒர் உணர்ச்சி கிளம்பியது. " கேவலம் ஒரு சிலந்திப் பூச்சி தனது இடைவிடா முயற்சியால் ஏழாவது முறையில் மேலே உள்ள கூட்டினை அடைந்ததல்லவா? நாமும் இப்போது ஏழாவது முறையாக எதிரிகளோடு போரிட்டால் வெல்லவும் கூடும்" என்பதே அவன் கொண்ட உணர்ச்சியாகும் இவ் வுணர்ச்சியோடு போரிட்டான். வெற்றியும் கண்டான். பார்த்தீர்களா