பக்கம்:நீதி போதனைப் பாட புத்தகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

– 30– கள் உண்டு. எவற்றை விட்டுவிடவேண்டும் என்று: கூறினலும் விட்டொழிப்பேன். ஆனல், திருடுவதை விட்டொழியேன்” என்று கூறினன். இதுதான் இவனே கல்வழிப் படுத்தற்குத் தக்க சமயம் என்று அறிக்த துறவியார் வாலிபனேப் பார்த்து, ' கட் டமைந்த காளேயே, எல்லாத் தீமைகளையும் மேற் கொள்ளினும் கொள்ளுக. ஆல்ை, பொய் புகலுதல் என்பதை எந்தச் சமயத்தும் மேற்கொள்ளாதே. இந்த ஒரு நற்பண்பைமட்டும் நீ மேற்கொள்வதாக எனக்கு உறுதி கொடு ' என்றனர். வாலிபன் துறவியார் கேட்டுக்கொண்டபடி தான் இனி பொய் புகலுவதில்லே ' என்று உறுதி கூறி. விட்டான். துறவியாரும், 'வாலிபன் கல்வழிப் படுவா குக ' என்று வாழ்த்திவிட்டுச் சென்ருர். வாலிபன் தன் வழக்கமான தித் தொழில்களில் ஈடுபட்டுப் பொய் புகலுதல் என்ற ஒன்றைமட்டும் கூருது வாழ்ந்து வந்தான். திருடன் வழக்கப்படி திருடப் புறப்பட்டான். அக் காலத்தில் மன்னர்கள் இரவில் நகர்சோதனை வருவர். அந்த முறைப்படி புறப்பட்ட மன்னன், வாலிபனைக் கண்டு யாவன்? இந்த கள் இரவில் புறப்படக் காரணம் என்ன?' என்று வினவினன். வாலிபன் துறவியார்க்குக் கொடுத்த வாக்குப்படி பொய் கருது. தான் ஒருதிருடன் என்றும், அரண்மனையில் திருடப்