பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

117

திருஅருட்பா

s.6060 mm . (*, ii, -KALLAARKUM

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே Kallaarkkum Katravarkkum Kallippu arullum Kallippē கானர்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே Kaannaarkkum Kanndavarkkurn Kannallikkum Kannnnē வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே Vallaarkkum maatta arkkum varam allikkum VaTarrlē

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே Madiyaarkkum madippa varkkum madhikodukkum madhiyö

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே Nałlaarkkum pollaarkkum nadunindra naduwë நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலம் கொடுக்கும் நலமே Narargallukkum Surargallukkum nalam kodukkum nalamē எல்லார்க்கும் பொது வில் நடம் இடுகின்ற சிவமே Ellarkkum podhuvilnadam idugindra Sivamē என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே Enarasē yaan pugalum isaiyum annindhu arullē

படிக்காதவர்களுக்கும்படித்தவர்களுக்கும் மிக்க மகிழ்ச்சியைத் தரும் மகிழ்ச்சியாகியவனே !

பார்க்க முடியாதவர்களுக்கும், பார்த்தவர்களுக்கும்கண்ணையும் அருளையும், அளிக்கும் கண் ஆனவனே!

வலிமை உடையவர்களுக்கும், வலிமை அற்றவர்களுக்கும் வரங்களை அளிக்கும் வரமே!

உன்னே மதியாதவர்களுக்கும், மதிப்பவர்களுக்கும் அறிவைக் கொடுக்கும் அறிவு மயம் ஆனவனே !

நல்லவர்களுக்கும், பொல்லாதவர்களுக்கும் நடுவு நிலமை யுடன் இருக்கும் நடு ஆனவனே!

மக்களுக்கும், தேவர்களுக்கும் நன்மைகளைக் கொடுக்கும் நன்மையே உருவானவனே!

எல்லாருக்கும் பொதுவில் நடனம் ஆடுகிற சிவமே! என்னுடைய அரசே! நான் பாடுகிற இசைப்பாடல்களை அணிகலன்களாக அணிந்து கொண்டு அருள் செய்வாயாக!

O Ecstatic Joy that bestows rapture to the learned and the

illitcrate;