பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சிபுரம் மெய்கண்டார் ஆதீன பண்ணிசைப் புலவர்,

தேவார இன்னிசைச்செல்வர், தேவாரமணி, தமிழ் இசைமணி, கலைச்சுடர், திருமுறைக் கலாநிதி,

பி. எ. எஸ். ராஜசேகரன் 7, நாட்டுசுப்பராய முதலிதெரு,

1967ம் ஆண்டு யான் இலங்கை அரசாங்க அழைப்பின் மீது தேவார ஆசிரியகைச் சென்று பணிபுரிந்த காலம். ஒருநாள் எங்கள் கமிட்டியின் தலைவரும் இலங்கையில் மிகப் புகழ் பெற்றவருமான உயர்திரு. சர். அருணசலம் மகாதேவா அவர்கள் காலமானதாக எனக்குத் தந்தி வந்தது. நான் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு விற்குச்சென்று அவரது பூதஉடல் சுட கலக்கு எடுத்துச் செல்லும் வரை நாள்முழுவதும் தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடி னேன். முறைப்படி கற்ற ஒதுவாராக நான் இருந்தமையால் அப் பணி செய்ய முடிந்தது. அத்தகையவர் இல்லாத இடங்களில், பூத உடல் கிடக்கும் போது முக்தியடையப் பாடல்களைப் பாட முறையான புத்தகம் ஒன்று இல்லையே என்ற குறை அப்போது என் மனத்தில் எழுந்தது.

நீத்தார் விண்ணப்பம் என்ற தலைப்பில் முறையான புத்தகம் வெளியிடவேண்டும் என்ற என் எண்ணத்தை, தென்னுப்பிரிக்கா வில் உள்ள நெட்டால் வைதீக சபையின் உறுப்பினரும், டர்பனில் தமிழுடன் சைவசமய வளர்ச்சிக்கெனத் தன்னை அர்ப்பணித்த வருமான உயர்திரு N. C. நாயுடு அவர்களுடைய தொடர்பு சென் னேயில் எனக்கு ஏற்பட்டபோது அவரிடம் தெரிவித்துக் கொண் டேன். என் வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு எனக்கு ஊக்கம் தந்து நீத்தார் வழிபாடு’ என்ற இந் நூல் வெளி வர வழி வகுத்தார்கள்.

இந்நூலைச் சிறப்பான முறையில் வெளியிடும் திரு. N.C.நாயுடு அவர்கட்கு என் நன்றியை எவ்வாறு தெரிவிப்பேன். வளர்க அவர் புகழ். வளர்க அவர் தொண்டு என இறைவனே வேண்டிக் கொள்வேன்.

பி. எ. எஸ். ராஜசேகரன்