பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 நீத்தார் வழிபாடு

லாதது; பெருந் தீமைகளை விளைவிப்பது; பெண் ஆசையால் இராவணன் மடிந்த கதை உலகு அறியும். நற்காமம் என்பது வேறு; தீய காமம் என்பது வேறு. தீய காமம்தான் கண்டகண்ட பெண் களிடத்து உறவு கொள்ளத் தூண்டும். அத்திய உறவினல் ஏற் படும் கொடுமைகள்தாம் எத்தனே! பொருட்கேடு, மானக்கேடு, அச்சம், பகை, இன்னும் எத்தனையோ பல நேரிடுமே. இம் மட்டோ உடம்பும் கெடும்; நோயும் உண்டாகும்; தீராப்பழியும் வருமே. ஆகவே அத்தகைய பொருட் பெண்டிர் முயக்கம் நீங்கி, இறைவனிடத்தும், மற்ற உயிர்கள் இடத்தும் ஆசையும் அன்பும் காட்டிகுல் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும். உலகிர் இதனை அறிவிராகுக.

திருச்சிற்றம்பலம்

உற்றரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் Utraarai yaan vēnndēn ür vēnndēn pērvēnndēn கற்ருரை யான் வேண் டேன் கற்பனவும் இனி அமையும் Katrarai yaan vénndén karrpanavum ini amaiyum குற்ருலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் Kutralaaththu amarnthu urraiyum kūththaa llIl

குரைகழற்கே

kurai kazharrkē கற்ருவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே. Katraavin manam polak kasinduruga vēnnduvanē.

திருச்சிற்றம்பலம்

என்னை வந்து அடைந்தவர்களே விரும்பமாட்டேன்; ஊரில் உள்ள மற்றவர்களையும் விரும்பமாட்டேன்; புகழையும் விரும்ப மாட்டேன்; படித்தவர்களேயும் யான் விரும்ப மாட்டேன்; இது காறும் படித்த படிப்பும் போதும்.

திருக்குற்ருலம் எனும் தலத்தில் விரும்பி வசிக்கும்படியான கூத்தாடும் பெருமானே! ஒலிசெய்யும் குழல்களை உடைய உன் திரு வடிகள் இடத்துக் கன்றைக் கண்டு உருகும் பசுவைப்போல், நான் கசிந்து உருக விரும்புகிறேன்.

I like not kith and kin; nor the inhabitants of my town. I aspire not for fame; I like not men of letters;