பக்கம்:நீத்தார் வழிபாடு (ஆங்கில மொழிபெயர்ப்புடன்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 நீத்தார் வழிபாடு

உன் திருவடிகள் ஆகிய கோயிலை அரை நிமிஷ நேரமும் தவம் செய்யும் முறையில் தியானம் செய்யத் தெரியாமல் இருக் கிறேன்.

நான் உயிர் இல்லாத பொருள்; அறிவு இல்லாதவன்; மூடன் ; மந்த புத்தி உடையவன்; தீவினை செய்து பிறந்தவன்; தனியே இருப்பவன்; ஏழை-இவற்ருல் நான் கலக்கம் அடைவே?ை எனக்கு நீ கருணை புரியாமல் இருக்கிருய்! என்ன குறை என்னிடம் இருக்கிறது? இப்பொழுது சொல்.

கயிலே மலையில் உள்ள தலைவர் ஆகிய சிவபெருமான் பெற்ற குமரனே!

கடகம் அணிந்த புயங்கள்; ரத்தினம் பதித்த பொன்மாஆல; வெட்சிமாலே-நறுமணம் வீசும் கடப்பமலர் மாஆல -இவற்றை அணிந்திருப்பவனே!

ஐயா! எனக்கு (அருள் செய்ய) இது நல்ல சமயம்! அதிகமான பெருமை, நிலையான சுகம், எல்லாச் செல்வங்கள், யோகம், மிகச்சிறந்த வாழ்வு, சிறப்பு, சிவஞானம், முத்தியாகிய பரகதி-ஆகிய இவற்றைக் கொடுத்து உதவி செய்ய வேண்டும்.

நெய் பூசிய வடித்த வேகல் உடையவனே! ஒளி பொருந்திய தாமரை மலர் போன்ற உன் திருவடிகளே நாள் தோறும் துதிக்க அருமையான தமிழை நீ எனக்கு அளித்

தாய.

மயில் மேல் உள்ள வீரனே!

அதிசயம் பல உடையது பழநிமலை

அப்பழநி மலையின் மேல் உள்ள அழகனே !

திருவேரகம் எனும் சுவாமி மலையில் இருக்கும் முருகப் பெருமானே!

Divine power of Tamil

Your lotus like Feet is a temple! I don’t spend even half a minute in penance and I am incapable

to concentrate on it. I am inanimate; ignoramus; an idiot and a dullard; I was born singly on account of evil deeds; Because of poverty, may I remain confused? Why have you not bestowed grace?