பக்கம்:நீலா மாலா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

128 அழைத்துவர அவசர அவசரமாகப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்திலே நம் வக்கீல் வராகமூர்த்தி இருக்கிருரே, அவர் போன் பண்ணி, "என்னப்பா, உன் பெயர், உன் மகள், பெயரெல் லாம் பேப்பரிலே வந்திருக்கிறதே! உன் மகள் படம் கூட வந்திருக்கிறது” என்று சொன்னர். அண்ணு நகருக்குத்தான் சீக்கிரம் பேப்பர் வராதே! வருகிற வழியிலே இந்தப் பேப்பரை வாங்கிப் பார்த்தேன். இந்தச் சின்ன வயதிலேயே இந்த இரண்டு பெண் களும் பேரும் புகழும் பெற்று விட்டார்கள் !’ என்று அளவில்லாத மகிழ்ச்சியோடு கூ றினர். 'அது சரி, நீங்கள் பூங்குடிக்கு மறுநாளே தந்தி கொடுத்துவிட்டீர்களே, உங்களுக்கு எப்படி அவ்வளவு சீக்கிரம் தகவல் கிடைத்தது?" என்று கேட்டாள் நளினி. 'உதவி போலீஸ் கமிஷனர் கம் உத்தண்டராம பிள்ளை இருக்கிருரே, அவர் சனிக்கிழமை காலை யிலே எனக்கு போன் பண்ணி, உங்கள் மாமனுரு டைய ஊர் எது?’ என்று கேட்டார். 'திடீரென்று இப்படிக் கேட்கிருரே, என்ன விசேஷமோ?” என்று கிஇனத்தேன். பூங்குடி’ என்று நான் பதில் சொன் னதும், உங்கள் மகள் பெயர் மாலாதானே' என்று கேட்டார். ஆம் என்றேன். ஒரு நல்ல செய்தி என்று ஆரம்பித்து, சங்கிலியாண்டி சரண டைந்ததை அவர் சுருக்கமாகக் கூறினர். உடனே கான் தந்தி கொடுத்தேன்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/130&oldid=1021693" இலிருந்து மீள்விக்கப்பட்டது