பக்கம்:நீலா மாலா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

13 இந்த இரண்டு போட்டிகளில் மட்டும்தான நீலா பரிசு வாங்கினுள்? இல்லை; கட்டுரைப் போட்டி, கையெழுத்துப் போட்டி, பொது அறிவுப் போட்டி என்று ஆக மொத்தம் ஐந்து போட்டிகளில் முதல் பரிசு பெற்ருள். ஒவியப் போட்டியிலும், மாறு வேடப் போட்டியிலும் இரண்டாவது பரிசு பெற். ருள். மொத்தம் ஏழு பரிசுகள்! அவளுடைய பெயரைச் சொல்லி அழைக்கும் ஒவ்வொரு தடவையும் கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். பரிசு பெற அவள் மேடைக்குச் செல்லும் போதும், திரும்பி வரும் போதும் பலர் அவளது கையைப் பிடித்துக் குலுக் கினர்; முதுகிலே தட்டிக் கொடுத்துப் பாராட்டுத் தெரிவித்தனர். இத்தனை பாராட்டும் ஆரவாரமும் இருந்தும் நீலாவின் முகத்தில் முழுமையான மகிழ்ச்சி இல்லை. ஏதோ ஒரு குறை அவளது நெஞ்சை அழுத்திக் கொண்டிருந்தது. 'கான் பரிசு பெறும் காட்சியை இத்தனை பேர் பார்த்துப் பாராட்டுகிருர்களே ! ஆனால், யார் அவசியம் பார்க்கவேண்டும் என்று நான் நினைக் கிறேனே அவர்கள் பார்க்கவில்லையே ' என்று அவள் எண்ணி எண்ணி ஏங்கிள்ை. தனித் தனியாக எல்லாப் போட்டிகளுக்கும் பரிசு கொடுத்து முடிந்த பிறகு, தலைமை ஆசிரியர் ஒரு வெள்ளிக் கோப்பையைக் கொண்டுவந்து கலெக்டருக்கு முன்னல், மேசை மேல் வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/14&oldid=1021562" இலிருந்து மீள்விக்கப்பட்டது