பக்கம்:நீலா மாலா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

13 'இந்தப் பூங்குடி ஒரு சிறு கிராமம். இதுவோ ஐந்தாம் வகுப்பு வரை உள்ள ஓர் ஆரம்பப் பள்ளி. ஆலுைம், இங்கு நடைபெறும் நமது பள்ளி ஆண்டு விழாவுக்கு நமது மாவட்டக் கலெக்டரே வந்திருந்து பரிசுகளை வ ழ ங் கு வ து நமக் கெல்லாம் பெருமையாக இருக்கிறது. நாங்கள் போட்டிகளை அறிவித்தபோது, எந்தக் குழந்தை மூன்று போட்டிகளில் முதல் பரிசு பெறுகிறதோ, அதற்கு ஒரு வெள்ளிக் கோப்பையைச் சிறப்புப் பரிசாகக் கொடுக்க ஆசைப்பட்டோம். ஆணுல், ஒரே சிறுமி ஐந்து முதல் பரிசுகளையும், இரண்டு இரண்டாவது பரிசுகளையும் பெற்றிருக்கிருள்! முந்நூறு ரூபாய் மதிப்புள்ள இந்த வெள்ளிக் கோப்பையை வாங்கி அன்பளிப்பாக நமக்குத் தங் தவர் வேறு யாருமல்ல; இன்று இவ் விழாவுக்குத் தலைமை தாங்கும் பரமசிவம் பிள்ளை அவர்களே! இந்த வெள்ளிக் கோப்பையைத் தட்டிக் கொண்டு போகவிருக்கும் சிறுமி யார் என்பது உங்களுக் குத் தெரியும்...” தலைமை ஆசிரியர் இப்படிச் சொன்னதும், தெரியும், தெரியும்’ என்றன. பல குரல்கள். கே. நீலா 1 கே. கீலா !” என்று பல சிறுவர் களும், சிறுமிகளும் உற்சாகப் பெருக்கில் குதித் துக்கொண்டே கூச்சலிட்டனர். "ஆம், இந்த வெள்ளிக் கோப்பையை நீலா வுக்கு வழங்கும்படி கலெக்டர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறிவிட்டுத் தலைமை ஆசிரியர் உட்கார்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/15&oldid=1021564" இலிருந்து மீள்விக்கப்பட்டது