பக்கம்:நீலா மாலா.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

138 பிறகு, மாலாவையும் நீலாவையும் ஒன்ருக கிற்க வைத்தும் உட்கார வைத்தும் புகைப்படங்கள் எடுத்தார்கள். இருவரும் சேர்ந்து சிறுவர் உலகம்’ படிப்பது போல ஒரு படம் எடுத்தார்கள். அப் போது டாக்டர் சூரியசேகர் அங்கு வங்துவிட்டார். டாக்டர், நளினி, ரவி ஆகியோரையும் அவர்க ளுடன் கிற்கவைத்துப் படம் எடுத்தார்கள். போலீஸ் வாரம் கொண்டாடும்போது இவர் களது பேட்டியுடன் சிறுவர் உலகம் வந்துவிடும். தமிழ் காட்டில் மட்டுமல்ல; பாரத நாடு முழுவதும் கீலா-மாலா புகழ் பரவப் போகிறது, எங்கள் பத்தி ரிகை மூலமாக' என்று பெருமையுடன் கூறி விடைபெற்றுச் சென்ருர் அருமைகாயகம். போலீஸ்வாரம் ஆரம்பமான மூன்ருவ து நாளே பூங்குடியிலிருந்து நாடகத்தில் நடிக்கப்போகும் குழந்தைகளும், தலைமை ஆசிரியரும், நீலாவின் அம்மா மீனுட்சி, முரளியின் அம்மா முத்துலட்சுமி, பரமசிவம் பிள்ளை, பார்வதி அம்மாள் ஆகியோரும் சென்னைக்கு வந்துவிட்டார்கள். டாக்டர் வீடு ஒரே கலகலப்பாக இருந்தது. சென்னையில் எல்லா முக்கியமான இடங்களை யும் சுற்றிப் பார்க்க டாக்டர் ஒரு வேன் ஏற்பாடு செய்திருந்தார். காலை எட்டு மணி முதல் பகல் ஒரு மணிவரை எல்லாரும் நகரைச் சுற்றிப் பார்ப் பார்கள். பிறகு, சாப்பிட்டுவிட்டு மூன்று மணிவரை ஒய்வு, நாலு மணிக்கு நாடக ஒத்திகை ஆரம்ப மாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/140&oldid=1021708" இலிருந்து மீள்விக்கப்பட்டது