பக்கம்:நீலா மாலா.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139

133 சென்னையை அவர்கள் முதல் நாள் சுற்றிப் பார்க்கச் சென்றபோது வழியிலே தெரிந்த ஒரு வண்ணச் சுவரொட்டியைக் கண்டார்கள். உடனே “முரளி, அதோ பார்!’ என்று மாலா குதுகலத் துடன் காட்டினுள். முரளி சுவரொட்டியில் இருக் ததை வாய்விட்டுப் படித்தான். மற்றக் குழந்தைகளும் அதைப் பார்த்தார்கள்; படித்தார்கள்; துள்ளிக் குதித்தார்கள். போகும் வழியிலெல்லாம் இவர்கள் கடிக்கப்போகும் காடகத் தைப் பற்றிய செ ய் தி ைய விளம்பரமாகச் சுவர்களில் ஒட்டியிருந்தார்கள். அதைப் பார்க்கப் பார்க்க அவர்களுக்கு ஒரே ஆனந்தமாக இருந்தது. நாடகம் நடைபெறும் காளில், காலை முதல் மாலை நாலு மணிவரை பாலர் அரங்கத்திலே ஒத்திகை கடந்தது. அன்று மாலை ஆறு மணிக்கு மேன்மை தங்கிய கவர்னர் முன்னிலையில் பொன் மனம் நாடகம் தொடங்கியது. நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் குழந்தைகள் மிகவும் க வ ன மாக வும் திறமையாகவும் கடித்தார்கள். மேலும் காட்சி அமைப்பு, ஒளி, ஒலி ஏற்பாடு: மேக்-அப் எல்லாம் சிறப்பாக இருந்ததால், நாடகம் பூங்குடியில் கடந்ததைவிடப் பலமடங்கு சிறப்பாக அமைந்தது. திருடன் மகளாக நடித்த நீலாவும், திருடகை கடித்த முரளியும் மிகவும் உருக்கமாக கடித்த காட்சியைக் கண்டு சபையோர் கண்கலங்கி விட்டனர். முன் வரிசையிலிருந்த கவர்னர்கூடக் கைக்குட்டையால் கண்களைத் துடைத்துக் கொண் A_rអំ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/141&oldid=1021710" இலிருந்து மீள்விக்கப்பட்டது