பக்கம்:நீலா மாலா.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

158 கட்டுரையையும் படங்களையும் பார்த்த டாக்டர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். பிறகு தமது மனைவி யைப் பார்த்து, நளினி, கீலா எவ்வளவு கன்ருக இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிருள் ஓர் இடத் தைப் படித்துக் காட்டுகிறேன், கேள்: நேரு மாமாவுக்குக் குழந்தைகள்என்ருல் கொள்ளை ஆசை. குழந்தைகளின் மலர்ந்த முகங்களைக் காணும் போதெல்லாம் அவருக்கு மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகளுடன் கூடி இருக்க, குழந்தைகளுடன் கொஞ்சிப் பேச குழந்தைகளுடன் குதித்து விளையாட எனக்கு மிகவும் ஆசை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய பிறந்த காளைச் சிறப்பாகக் கொண் டாட வேண்டும் என்று பலர் விரும்பினர்கள். ஆல்ை, கேரு மாமா அதற்கு இணங்கவில்லை. தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள். கடைசி யாக அவர் இணங்கினர். என் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டுமானல், அதைக் குழங் தைகள் தினமாகக் கொண்டாட வேண்டும். அதுதான் என் விருப்பம் என்ருர், நேரு மாமா பிறந்த நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தின மாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதை காம் எல்லாரும் எவ்வளவு குது.ாகலமாகக் கொண்டாடி வருகிருேம் ! நேரு மாமாவைப் போலவே லெனின் மாமாவும் குழந்தைகளிடத்தில் மிகுந்த அன்பு வைத்திருந்தார். எதிர்காலத்தில் காட்டை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நீலா_மாலா.pdf/160&oldid=1021734" இலிருந்து மீள்விக்கப்பட்டது